ஏ.எச்.ஏ. ஹுஸைன் / 2018 மார்ச் 08 , பி.ப. 02:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முஹாஜிரீன் கிராமத்தைச் சேர்ந்த ஐயூப்கான் அம்ஸாத் அலி (வயது 25) எனும் இளைஞன், மின்மாற்றிக் கம்பத்தில் மோதுண்டு, இன்று (08) உயிரிழந்துள்ளாரென பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம்பற்றி மேலும் தெரியவருவதாவது, நேற்றுப் புதன்கிழமை நள்ளிரவு வேளையில், மோட்டார் சைக்கிளில் இவர் தனியாக முஹாஜிரீன் கிராமத்திலிருந்து பயணித்துக் கொண்டிருக்கும்போது, இவர் பயணம் செய்த மோட்டார் சைக்கிள் வேகக் கட்டுப்பாட்டை இழந்து, வீதி மருங்கிலிருந்த மின்மாற்றிக் கம்பத்துடன் மோதியுள்ளது.
காயமடைந்த இவர், உடனடியாக ஏறாவூர் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பயனின்றி இன்று காலை உயிரிழந்தார்.
12 minute ago
53 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
53 minute ago
1 hours ago
1 hours ago