Editorial / 2019 ஜூலை 24 , பி.ப. 04:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எஸ்.எம்.நூர்தீன்
காத்தான்குடியில் நேற்றுமுன்தினம் மாலை வீடொன்றில் தீப்பரவியதால்
வீட்டின் ஒரு பகுதி முற்றாக எரிந்துள்ளதென வீட்டின் உரிமையாளர் ஏ.முயீஸ் தெரிவித்தார்.
இச்சம்பவம், காத்தான்குடி 3ம் குறிச்சி ஹிஜ்றா வீதியிலுள்ள வீட்டிலேயே தீப்பரவி யுள்ளது. இவ் வீட்டில் திடீரென தீப் பரவியதையடுத்து, அயலவர்கள் தீயை அணைத்துள்ளதாக தெரிவித்த அயலவர்கள், மின் ஒழுக்கினால் இந்த தீப் பரவியிருக்கலாமென சந்தேகிப்பதாகவும் இதனைக் கருத்தில் கொண்டு, இலங்கை மின்சார சபையின் காத்தான்குடி அலுவலகத்துக்கு அறிவித்ததையடுத்து அதன் ஊழியர்கள் விரைந்து மின் இணைப்பை துண்டித்துள்ளனர்.
இந்த தீ சம்பவத்தினால் வீட்டின் ஒரு பகுதி எரிந்து சேதமடைந்துள்ளதுடன் வீட்டின் சில பொருள்களும் எரிந்து சேதமடைந்துள்ளதாக வீட்டுரிமையாளர் தெரிவித்தார்.
1 hours ago
5 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
5 hours ago
5 hours ago