2025 ஓகஸ்ட் 18, திங்கட்கிழமை

ஏப்ரல் 12இற்கு முன்னர் சஜித் தலைமையிலான ஐ.தே.க: ஹலீம் எம்.பி

Super User   / 2011 பெப்ரவரி 06 , மு.ப. 10:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

(மொஹொமட் ஆஸிக்)

எதிர்வரும் ஏப்ரல் 12ஆம் திகதிக்கு முன்னர் சஜித் பிரேமதாசவின் தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சி உருவாகும் என கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எச்.ஏ. ஹலீம் தெரிவித்தார்.

இன்று ஞாயிற்றுக்கிழமை காலை கண்டி மாவட்ட அக்குறணை, ஹாரிஸ்பத்துவ, பூஜாபிட்டிய ஆகிய பிரதேச சபைகளுக்காக போட்டியிடும் ஐ.தே.க வேட்பாளர்கள் மத்தியில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றி அவர்,

இன்று நாடு எதிர்பார்ப்பதும் கேட்பதும் சஜித் பிரேமதாசவின் தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சியையே. இதனை நன்றாக புரிந்து கொண்ட ஐ.தே.க கடந்த மாநாட்டில் புதிய யாப்பை ஏகமனதாக நிறைவேற்றியது.

அதனடிப்படையில் எதிர்வரும் ஏப்ரல் 12ஆம் திகதிக்கு முன் புதிய தலைவர்  நியமிக்க வேண்டும். இதன் போது சஜித் பிரேமதாசவின் தலைமைத்துவத்தை கொண்ட ஐ.தே.க உருவாகும் என்றார் அவர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X