2025 ஓகஸ்ட் 18, திங்கட்கிழமை

மலையகத்தில் 4 மாவட்டங்கள் மண்சரிவு அபாயமுள்ள பிரதேசங்களாக பிரகடனம்

Suganthini Ratnam   / 2011 பெப்ரவரி 03 , மு.ப. 02:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(மொஹொமட் ஆஸிக்)

கடந்த சில தினங்களாக பெய்து வரும் கடும் மழையையடுத்து, மலையகத்தின் 4 மாவட்டங்கள் மண்சரிவு அபாயமுள்ள பிரதேசங்களாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிலையம் அறிவித்துள்ளது.

கண்டி, மாத்தளை, நுவரெலியா மற்றும் பதுளை ஆகிய மாவட்டங்கள் மண்சரிவு அபாயமுள்ள மாவட்டங்களாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிலையத்தின் மண்சரிவுப் பிரிவின் உயர் அதிகாரி ஆர்.எம்.எஸ்.பண்டார தெரிவித்தார்.

மத்திய மாகாணத்தை சேர்ந்த கண்டி, மாத்தளை நுவரெலியா ஆகிய 3 மாவட்டங்களும் ஊவா மாகாணத்தை சேர்ந்த பதுளை மாவட்டமும் மண்சரிவு அபாயத்தை பெருமளவில் எதிர்கொண்டுள்ளதாகவும் இதனால், அவை பாதுகாப்பற்ற மண்சரிவு அபாயமுள்ள பிரதேசங்களாகவுள்ளதாகவும் அவர் கூறினார்.

இவ் நான்கு மாவட்டங்களிலிருந்தும் 500க்கும் மேற்பட்ட குடும்பங்களை பாதுகாப்பான பிரதேசங்களுக்கு செல்லுமாறு பணித்துள்ளதுடன்,  மண்சரிவு மற்றும்; நிலம் கீழிறங்குவதையும் கட்டுபடுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் ஆர்.எம்.எஸ்.பண்டார குறிப்பிட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X