2025 ஓகஸ்ட் 18, திங்கட்கிழமை

மலையகத்தில் 4 பாடசாலைகள் மூடப்பட்டன

Suganthini Ratnam   / 2011 பெப்ரவரி 07 , மு.ப. 03:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(மொஹொமட் ஆஸிக்)

மண்சரிவு மற்றும் வெள்ள அபாயம் தொடர்ந்தும் நிலவும் மத்திய மாகாணத்தை சேர்ந்த  நான்கு பாடசாலைகளை மறுஅறிவித்தல் வரை மூடுவதற்கு தீர்மானித்துள்ளதாக மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்கா நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை தெரிவித்தார்.

மண்சரிவு அபாயமுள்ள பாடசாலைகளில் கல்வி கற்கும் மாணவர்களது பாதுகாப்பை கருத்திற்கொண்டே இத்தீர்மானம் எடுக்கப்பட்டதாகவும்; அவர் கூறினார்.

தம்புள்ளை வீர மொஹான ஜய மகாவித்தியாலயம், உக்குவளை இம்புல்பிட்டிய மகாவித்தியாலயம், கண்டி கோத்தமீ மகளிர் மகாவித்தியாலயம், வலப்பனை கீர்த்தி பண்டாரபுர மகாவித்தியாலயம் ஆகிய பாடசாலைகளை மூடுவதற்கே தீர்மானிக்கப்பட்டுள்ளது.  

இப்பாடசாலைகளை மீண்டும் ஆரம்பமாகும்  திகதி பற்றி பின்னர் அறிவிக்கப்படுமெனவும் மத்திய மாகாண  முதலமைச்சர் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X