2026 ஏப்ரல் 13, திங்கட்கிழமை

'YOUTH GOT LALENT' வேலைத்திட்டம் ஆரம்பம்

Niroshini   / 2016 ஓகஸ்ட் 14 , மு.ப. 10:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பா.திருஞானம்

பிரதமர் ரணில் விக்கரமசிங்கவின் நேரடி மேற்பார்வையில் இயங்கும் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகாரங்கள் அமைச்சும், தேசிய இளைஞர் சேவைகள் மன்றமும் இணைந்து நடாத்தும் 'YOUTH GOT LALENT' வேலைத்திட்டம் இன்று புஸ்ஸல்லாவ ரொத்சைல்ட்ட தோட்டத்தில் ஆரம்பிக்கப்பட்டது.

இந்த வேலைத்திட்டம்  18ஆம் திகதி வரை நடைபெறும்.

இதன் முதல் கட்டமாக அரச நிதியில் 75,000 ரூபாய் வழங்கப்படும். முடிவில் இந்த வேலைத்திட்டம் 250,000 ரூபாய் பெறுமதிமிக்க வேலைத்திட்டமாக முடிக்கபட வேண்டும். அதற்கு அதிகமாக இருந்தாலும் வரவேற்க்கதக்கது.

இந்த வேலைத்திட்டத்தை முறையாக முடிக்கும் கிராமங்கள் மற்றும்  தோட்டங்களில் பதிவு  செய்யப்பட்ட இளைஞர் அணிகளுக்கு போட்டியின் மூலம் ஒரு கோடி ரூபாய் அன்பளிப்பாக வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இளைஞர்களை வலுப்படுத்தும் நோக்கில் செயற்படும் இந்த அபிவிருத்தி வேலைத்திட்டத்தில் புஸ்ஸல்லாவ - ரொத்சைல்ட் தோட்டத்தில் தற்காலிக கூடாரத்தில் நடைபெற்று வந்த அறநெறி பாடசாலை ஒன்றுக்கு நிரந்தர கட்டடம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டபட்டது.

இந்த வேலைத்திட்டத்தை மேற்படி தோட்டத்தின் கலைமகள் இளைஞர் சேவைகள் அணி மேற்கொள்ளும்.  இந்நிகழ்வுக்கு தோட்ட முகாமையாளர், தோட்ட அதிகாரிகள் கொத்மலை திவிநெகும் அதிகாரிகள், தேசிய இளைஞர் சேவைகள் மன்ற அதிகாரிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .