2026 ஏப்ரல் 04, சனிக்கிழமை

50 அடி பள்ளத்தில் விழுந்து வான் விபத்து: 9 பேர் காயம்

Kogilavani   / 2016 மே 13 , மு.ப. 10:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.கணேசன், மு.இராமச்சந்திரன், ரஞ்சித் ராஜபக்ஷ

கொட்டகலை பகுதியிலிருந்து மேபீல்ட் பகுதியை நோக்கி பயணிகளை ஏற்றிச் சென்ற வான் ஒன்று, திம்புள்ள- பத்தனை  மேபீல்ட் தோட்டம் சாமஸ் பிரிவில் வீதியை விட்டு விலகி 50 அடி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானதில் 9 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் 2.30 மணியளவில் நடைபெற்ற இவ்விபத்தில் காயமடைந்தவர்கள் கொட்டகலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பயணிகளை ஏற்றிச்சென்ற வான் ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது. இவ்விபத்தில் 9 வயது சிறுமியும் உள்ளடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .