Kogilavani / 2016 மே 19 , மு.ப. 11:34 - 0 - {{hitsCtrl.values.hits}}

சிவாணிஸ்ரீ
'நாட்டில் நடைபெறும் சகல விழாக்கள் மற்றும் உற்சவங்களுக்காக செலவிடப்படும் பணத்தை மண்சரிவு மற்றும் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்காக செலவிட முன்வர வேண்டும்' என சப்ரகமுவ மாகாண சபை உறுப்பினர் கணபதி இராமச்சந்திரன் கோரியுள்ளார்.
இரத்தினபுரி மாவட்டத்தில் மண்சரிவு மற்றும் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட தோட்ட மக்களுக்கு உலருணவு பொருட்கள் மற்றும் ஏனைய உதவிகளை பெற்றுக் கொடுப்பது குறித்த கலந்துரையாடல் இன்று (19) இரத்தினபுரியில் அமைந்துள்ள மாகாண சபை உறுப்பினரின் அலுவலகத்தில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலே அவர் இதனை கூறினார்.
இங்கு மேலும் கூறிய அவர், 'நாட்டில் சீரற்ற காலநிலை காரணமாக கேகாலை மாவட்டத்தில் பல பிரதேசங்களில் பாரிய மண்சரிவுகள் ஏற்பட்டுள்ளதுடன் பலர் பலியாகியுள்ளனர். அத்தோடு இரத்தினபுரி மாவட்டத்தில் 1,605 குடும்பங்களைச் சேரந்த 6,698 பேர் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதுடன் பாதுகாப்பான இடங்களுக்கு தஞ்சமடைந்துள்ளனர்' என அவர் சுட்டிக்காட்டினார்.
'இதனால், தேவையற்ற செலவுகளை தவிர்த்து மண்சரிவு மற்றும் வெள்ள அனர்த்தத்தில் பலியான மக்களின் உறவினர்கள், பிள்ளைகள் மற்றும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகளை செய்ய முன்வரவேண்டும்' என்றும் என அவர் கோரினார்.
'அரசாங்கம் பல்வேறு விழாக்கள் மற்றும் உற்சவங்களை கொண்டாடுவதற்காக கூடுதலான நிதியை ஒதுக்குகின்றது. அதேபோன்று அரசசார்பற்ற நிறுவனங்களும் இவ்வாறு கூடுதலான நிதியை செவிடுகின்றன. இவை அனைத்தையும் தவிர்த்து இந்நிதியின் மூலம் மண்சரிவு மற்றும் வெள்ள அனர்த்தத்தில் பலியான மக்களின் உறவினர்கள், பிள்ளைகள் மற்றும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகளை பெற்றுகொடுப்பதற்கு அரச, அரசார்பற்ற நிறுவனங்கள் முன்வர வேண்டும்' எனவும் அவர் கோரினார்.
5 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
9 hours ago