Niroshini / 2016 ஓகஸ்ட் 20 , மு.ப. 06:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
-மு.இராமச்சந்திரன்
2018ஆம் ஆண்டளவில் ஏனைய மாகாணங்களை விட மத்திய மாகாணம் விவசாயதுறையில் முன்னேற்றமடையும். அதற்கான வேலைத்திட்டங்களை மத்திய அரசாங்கத்துடன் மாகாண அமைச்சு இணைந்து பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுத்துவருகின்றது என மத்திய மாகாண விவசாய, இந்து கலாசார அமைச்சர் மருதபாண்டி ரமேஸ்வரன் தெரிவித்தார்.
ஆரோக்கியமான வாழ்விற்கு போஷாக்கான உணவு எனும் தொனிப்பொருளின் கீழ் அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் உணவு உற்பத்தி தேசிய வேலைத் திட்டத்தினூடாக மலையக விவசாய மற்றும் விலங்கு வள கண்காட்சி வியாழக்கிழமை(18) நுவரெலியா சினிசிட்டா மண்டபத்தில் உத்தியோகப்பூர்வமாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் ஆரம்பித்துவைக்கப்பட்டது. இதன்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,
எமது நாட்டின் ஜனாதிபதி எமது மக்களை விவசாய துறையில் முன்னேற வேண்டும் என்பதற்காகவே இவ்வாறான நிதி ஒதுக்கீடுகளை செய்து வருகின்றார். விவசாயதுறையில் நாம்; முன்னேற வேண்டும் நச்சு தன்மையற்ற உணவு உற்பத்தியை ஏற்ப்படுத்தி அதனூடாக மக்களை ஆரோக்கியமான வாழ்விற்கு கொண்டு செல்வதே எமது நோக்கம்.
மத்திய மாகாணத்தை பொறுத்தவரையில் மாத்தளை மாவட்டத்தில் பெரும்பான்மையாக வெங்காயம் உற்பத்தி செய்யப்படுகின்றது. அதேபோல கண்டி மாவட்டத்தில் நெல் மற்றும் பழவகைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. நுவரெலியா மாவட்டத்திலே பலவகையான மரக்கறிகள் உற்பத்தி செய்யப்படுகின்றன.இதனை ஊக்கவிக்க மத்திய மாகாண விவசாய அமைச்சு பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது.
இதனூடாக எமது எதிர்ப்பார்ப்பு நச்சு தன்மையற்ற உணவு வகைகளை எமது மாகாணத்தில் உற்பத்தி செய்யவேண்டும் அதற்கான வேலைத்திட்டங்களையும் ஏற்பாடு செய்திருக்கின்றோம் என்றார்.
மேலும் 2018ஆம் ஆண்டளவில் அனைத்து மக்களும் அவர்களுக்கு தேவையான மரக்கறிகளை தாமாகவே உற்பத்தி செய்துக்கொள்ளும் வகையில் அவர் அவர்களுக்கென ஒரு வீட்டுத்தோட்டத்தை உருவாக்கி கொள்வதற்கான வேலைத்திட்டங்களை மத்திய மாகாண விவசாய அமைச்சு முன்னெடுத்துவருகின்றது.
அதேவளை, பால் உற்பத்தியில் நுவரெலியா மாவட்டம் கூடுதலான பங்களிப்பை செலுத்தி வருகின்றது. எனவே பால் உற்பத்தியை அதிகரிக்க பண்ணையாளர்களுக்கு பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுத்துள்ளோம் எனவும் அவர் தெரிவித்தார்.
6 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
7 hours ago