2026 ஏப்ரல் 04, சனிக்கிழமை

60 இலட்சம் ரூபாய் செலவில் கட்டடம் நிர்மாணிக்க நடவடிக்கை

Kogilavani   / 2016 மே 20 , மு.ப. 07:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரஸீன் ரஸ்மின்

கற்பிட்டி மாவட்ட வைத்தியசாலையில் கடமையாற்றும் சாரதிகளுக்கான விடுதி மற்றும் அம்பியூலன்ஸ் வண்டிக்கான தரிப்பிடம் என்பவற்றுக்கான புதிய கட்டடம் நிர்மாணிப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு வியாழக்கிழமை இடம்பெற்றது.

கற்பிட்டி மாவட்ட வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி டாக்டர் ஜெயசுந்தரவின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் வடமேல் மாகாண சபை உறுப்பினர் என்.டி.எம்.தாஹிர் பிரதம அதிதியாக  கலந்துகொண்டு அடிக்கல்லை நாட்டி வைத்தார்.

இந்நிகழ்வில் கற்பிட்டி மாவட்ட வைத்தியசாலையில் கடமையாற்றும் வைத்தியர்கள் மற்றும் ஊழியர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
வடமேல் மாகாண சபை உறுப்பினர் என்.டி.எம்.தாஹிரின் வேண்டுகோளுக்கிணங்க மாகாண சுகாதார அமைச்சு  குறித்த கட்டட நிர்மாணப் பணிகளுக்கென 60 இலட்சம் ரூபாவை ஒதுக்கீடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .