2026 ஏப்ரல் 19, ஞாயிற்றுக்கிழமை

10 இலட்சம் வெற்று போத்தல்கள் மீட்பு

Kogilavani   / 2017 மே 15 , மு.ப. 06:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

காமினி பண்டார

நல்லதண்ணி-சிவனொளிபாத மலைக்கு உட்பட்ட பகுதிகளில், வீசி எறியப்பட்ட நிலையில் கிடந்த சுமார் 10 இலட்சத்துக்கும் மேற்பட்ட பயன்படுத்தப்பட்ட பிளாஸ்டிக் போத்தல்களை இதுவரை சேகரித்துள்ளதாக, நல்லதண்ணி பிரதேச செயலகத்தின் கழிவுகளை சேகரிக்கும் பிரிவின் உயர் அதிகாரியான ஏ.பிள்யூ.ஏமத்ன தெரிவித்துள்ளார்.

பருவகாலத்தையொட்டி கடந்த ஆறு மாதங்களில் சிவனொளிபாத மலைக்கு வந்துச் சென்ற சுமார் 6 இலட்சத்துக்கும் மேற்பட்ட யாத்திரிகர்கள், இவ்வாறு பாணங்கள் மற்றும் குடிநீரை  அருந்திவிட்டு,  வெற்று போத்தல்களை வீதிகளில் எறிந்து விட்டுச் சென்றுள்ளதாகவும் அவ்வதிகாரி தெரிவித்தார்.

இனிவரும் காலங்களில் சிவனொளிபாத மலைக்கு யாத்திரை மேற்கொள்ளும் யாத்திரிகர்கள், சிவபூமி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கழிவுகளை எறிந்துவிட்டுச் செல்வதை தவிர்க்க வேண்டும் என்றும், அவர் கோரியுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .