2026 ஏப்ரல் 04, சனிக்கிழமை

இஸ்லாமிய தின விழா

Niroshini   / 2016 மே 31 , மு.ப. 10:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

கண்டி பதியுத்தீன் முஸ்லிம் மகளிர் கல்லூரியின் முஸ்லிம் மஜ்லிஸ் ஏற்பாடு செய்துள்ள இஸ்லாமிய தின விழா நாளை மறுதினம் வியாழக்கிழமை பிற்பகல் 2 மணிக்கு கல்லூரி மண்டபத்தில் நடைபெறும். 

வலயக் கல்லூரி பிரதி பணிப்பாளர் பௌஸூன் அமீன் தலைமையில் நடைபெறும் இந்நிகழ்ச்சியில், மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க பிரதம அதிதியாக கலந்து கொள்ளவுள்ளார்.  கல்லூரி அதிபர் சியாமா ரஹீம் உட்பட வலயக் கல்விப் பணிப்பாளர்கள் அதிதிகளாக கலந்து கொள்வர்.

இஸ்லாமிய தின போட்டியில் வெற்றிபெற்ற மாணவியருக்கு இவ்விழாவில் பரிசில்களும் வழங்கப்படும் என கல்லூரி ஆசிரியை அரபா உதுமான் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .