2026 ஏப்ரல் 13, திங்கட்கிழமை

'உல்லாச இடமாகவே விளையாட்டு மைதானம் மாறியுள்ளது'

Princiya Dixci   / 2016 ஓகஸ்ட் 19 , மு.ப. 05:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

-இந்திக அருண குமார

மாத்தளை மாவட்டத்தில் நாவுல நகரத்திலுள்ள பஸ் நிலையத்தின்  பின்புறமாக உள்ள மிகப் பெரிய மைதானம், துஷ்பிரயோகங்கள் இடம்பெறுவதற்கு பிரசித்திபெற்ற இடமாகத் தற்போது, மாறியுள்ளதாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.

மாத்தளை, தம்புள்ளை போன்ற பிரசேங்களில் தனியார் வகுப்புக்குச் செல்லும் மாணவர்கள் வகுப்பு முடிந்தவுடன் இரவு நேரத்தைக் குறித்த விளையாட்டு மைதானத்தில் களிப்பதாக அறியமுடிகின்றது. இவர்கள், விளையாட்டு மைதானத்தின் பின்புறத்தில் தங்கித் தகாத செயற்பாடுகளில் ஈடுபட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

நாவுல நகரத்தில் அமைந்துள்ள மிகப் பெரிய மைதானமாகும். அந்த மைதானத்தில் யாருக்கும் தெரியாத வகையில் இரண்டு பாதைகைகள் காணப்படுவதாகவும் பதுங்கு குழி ஒன்றும் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பாக  நாவுல பொலிஸார் விசாரணையை முன்னெடுத்து வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .