Sudharshini / 2015 டிசெம்பர் 13 , மு.ப. 09:38 - 0 - {{hitsCtrl.values.hits}}

எஸ். சுஜிதா
சமூக நலன்புரி அமைச்சினூடாக 1 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டின் கீழ் நிர்மாணிக்கப்பட்டுள்ள சமர்ஸட் தோட்ட கார்லி பேக் பாலம், இன்று ஞாயிற்றுக்கிழமை (13) பொது மக்களின் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டது.
அடிக்கல் நட்டப்பட்டு கடந்த 3 வருடங்களாக பாலம் புனரமைக்கப்படாமல் இருந்ததால் சமர்ஸட் தோட்ட கார்லி பேக் பிரிவு மக்கள், பல சிரமங்களுக்கு முகங்கொடுத்தனர்
தற்காலிகமாக போடப்பட்டிருந்த பாலமும் கடந்த 2 மாதங்களுக்கு முன்னர் பெய்த அடைமழையை அடுத்து ஏற்பட்ட வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்டுள்ளது.
இப்பாலத்தின் நிர்மாணப் பணிக்காக சமர்ஸட் தோட்ட நிர்வாகமும் கார்லி பேக் பிரிவு மக்களும் தமது முழுமையான பங்களிப்பை வழங்கியிருந்தனர்.
இந்நிகழ்வில், சமர்ஸட் தோட்ட உதவி முகாமையாளர் சுஜீவன் கண்ணா , நுவரெலியா பிரதேச செயலக சுபி விடுத்தி உத்தியோகத்தர் சந்திரலேகன், கிராம உத்தியோகத்தர் , திருமதி. வாசனா ஹேரத் உட்பட பலர் கலந்துகொண்டனர்.


45 minute ago
8 hours ago
8 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
45 minute ago
8 hours ago
8 hours ago
8 hours ago