2026 ஏப்ரல் 17, வெள்ளிக்கிழமை

கார்-லொறி மோதி விபத்து: ஐவர் படுகாயம்

Kogilavani   / 2016 ஜனவரி 17 , மு.ப. 08:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

மொஹொமட் ஆஸிக்

பொலன்னறுவையிலிருந்து மாத்தளைக்கு பயணித்த  காரும்  கண்டியிலிருந்து மாத்தளை பக்கமாக  லொறியும் சனிக்கிழமை(16) இரவு, அலவத்துகொடை, பலகடுவ பிரதேசத்தில் வைத்து  நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் ஒரே குடும்பத்தை சேர்ந்;த ஐவர் படுகாயமடைந்துள்ளனர்.

விபத்தில் காயமடைந்தவர்கள் மாத்தளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக  பொலிஸார் தெரிவித்தனர்.

கண்டி, தலாத்து ஓயாவை சேர்ந்த  இரு பெண்கள், இரு குழந்தைகள் மற்றும் நபரொருவரே விபத்தில் காயமடைந்துள்ளனர். இவர்கள், பொலன்னறுவை  சோமாவதிய விஹாரைக்கு காரில் சென்றுவிட்டு, வீடு திரும்பியபோது விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்துடன் தொடர்புடையதாக கூறப்படும் லொறியின் சாரதியை பொலிஸார் கைதுசெய்துள்ளதுடன் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .