2026 ஏப்ரல் 16, வியாழக்கிழமை

29 கிலோகிராம் மதனமோதகத்துடன் மூவர் கைது

Niroshini   / 2016 ஜனவரி 21 , மு.ப. 11:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மொஹொமட் ஆஸிக்

எம்பிலிபிட்டியவில் இருந்து மாத்தளை பிரதேசத்துக்கு முச்சக்கர வண்டி ஒன்றில் கொண்டுசெல்லப்பட்ட கஞ்சா கலந்த  29 கிலோகிராம் மதன மோதகத்தை, அலவத்துகொடை பொலிஸார் புதன்கிழமை(20) கைப்பற்றியுள்ளதுடன், சந்தேகத்தின் பேரில் மூவரை கைதுசெய்துள்ளனர்.

இவை 2,500 வில்லைகளாக பொதிசெய்யப்பட்டிருந்த நிலையில் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இம்மதன மோதகத்தை, மாத்தளையிலுள்ள  வியாபாரி ஒருவருக்கு விநியோகிப்பதற்காக மேற்படி மூவரும், பஸ்ஸொன்றில் எடுத்துச் சென்று பின், முச்சக்கர வண்டியில் மாத்தளை நோக்கி பயணித்துக்கொண்டிருந்த போதே,  பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.

அலவத்துகொடை, பலகடுவை பிரதேசத்தில் வாகனங்களை சோதனை செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த அலவத்துகொடை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி நிஷாந்த ஹெட்டியாரச்சி உள்ளிட்ட பொலிஸ் குழுவினர், இம்முச்சக்கர வண்டியை சோதனையிட்டபோது, மதன மோதகம் அடங்கிய பொதியை கண்டெடுத்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .