2026 ஏப்ரல் 04, சனிக்கிழமை

கல்வி தரத்தை உயர்த்தவதற்கே ஆசிரியர் உதவியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்

Niroshini   / 2016 மே 31 , மு.ப. 10:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சிவாணி ஸ்ரீ

மலையகப் பாடசாலைகளில் கல்வி கற்கும் மாணவர்களின் கல்வி தரத்தை மேலும் உயர்த்தவதற்கே மலையகப் பாடசாலைகளுக்கு ஆசிரியர் உதவியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என்று சப்ரகமவ மாகாண முதலமைச்சர் மஹிபால ஹேரத் தெரிவித்தார்.

சப்ரகமுவ மாகாணத்தில் மலையக பாடசாலைகளுக்கு மேலும் 80 பேருக்கு ஆசிரியர் உதவியாளர் நியமனம் வழங்கும் நிகழ்வு இன்று(31) இரத்தினபுரி புதிய நகரில் அமைந்துள்ள சப்ரகமுவ மாகாண சபையின் கேட்ப்போர் கூடத்தில் இடம்பெற்றது. இதில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மாகாண முதலமைச்சர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,

ஆசிரியர் உதவியாளராக நியமனம் பெற்றவர்களுக்கு முழுமையான பயிற்சிகள் வழங்கப்பட்டு அவர்களை ஆசிரியர் தரத்துக்கு உள்வாங்கப்படுவதற்கான சகல வேலைத்திட்டங்களையும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான அரசாங்கத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

சப்ரகமுவ மாகாணத்தில் உள்ள தமிழ்மொழி மூல பாடசாலைகளில் ஆசிரியர் பற்றாகுறை நிலவி வந்தது. தற்போது அவை பூர்த்தி செய்யப்பட்டுள்ள.

சப்ரகமுவ மாகாணத்தில் தமிழ்மொழி மூல பாடசாலைகளில் ஆசிரியர் பற்றாக்குறை குறித்து நாம் ஜனாதிபதி மற்றும் கல்வி அமைச்சரின் கவனத்துக்கு கொண்டுவந்ததன் பயனாகவே சப்ரகமுவ மாகாணத்துக்கு ஆசிரியர் உதவியாளர்கள் பெரும்பாலானோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

சப்ரகமுவ மாகாணத்தில் உள்ள மலையகப் பாடசாலைகள் அனைத்தும் சப்ரகமுவ மாகாண சபையின் மூலம் அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளன. பாடசாலைகளுக்கு தேவையான வளங்களும் பெற்றுகொடுக்கப்பட்டுள்ளன.

தோட்டப் பகுதி மாணவர்களை ஏனைய பாடசாலை மாணவர்களை போன்று சமூகத்துக்கு கொண்டுவருவதற்கு ஆசிரியர் உதவியாளராக நியமனம் பெற்றவர்கள் அக்கறை கொள்ள வேண்டும்.

அத்தோடு அசிரியர் உதவியாளராக நியமனம் பெற்றவர்கள் அவர்களுக்கு கிடைத்திருக்கும் பாடசாலையின் அபிவிருத்திக்கும் மாணவர்களுக்கு சிறந்த கல்வியை பெற்றுகொடுப்பதற்கும் பொறுப்புடன் சேவையாற்ற வேண்டும் என்றும் மாகாண முதலமைச்சர் மஹிபால ஹேரத் மேலும் தெரிவித்தார்.

இந்நிகழ்வில், சப்ரகமுவ மாகாண சபையின் இ.தொ.கா உறுப்பினர் அண்ணாமலை பாஸ்கரன், மாகாண சபை உறுப்பினர் சலித்த கருணாரத்ன, சப்ரகமுவ மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் மஹிந்த எஸ்.வீரசூரிய ஆகியோரும் உரையாற்றினார்கள்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .