2026 ஏப்ரல் 11, சனிக்கிழமை

'சுதந்திரமாக செயலாற்றுவதற்கு ​பொறிமுறை வேண்டும்'

Niroshini   / 2017 மே 07 , பி.ப. 08:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

பல்வேறு மாவட்டங்களின் பிரதிநிதிகளாக கடமையாற்றும் அமைச்சர்கள், மக்களுக்கான அவர்களுடைய சேவைகளை சுதந்திரமாக செய்துகொண்டு செல்வதற்கு, பொறி​முறையொன்றை உருவாக்க​ வேண்டும் என்று, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம், தொலைத்தொடர்புகள் மற்றும் டிஜிட்டல் உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ வலியுறுத்தியுள்ளார்.

பதுளையில், சனிக்கிழமை (06) இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே, அவர்  மேற்கண்டவாறு தெரிவித்தார்.

“எமது மாவட்டத்திலுள்ள மக்களுக்கு, நாம் ஏதேனும் செய்ய வேண்டும் என்று நினைத்தால், அதற்கு அனுமதி பெறுவதற்காக, மாகாணசபையிலுள்ள முதலமைச்சரைச் சந்திக்கச் செல்லவேண்டியுள்ளது. அவ்வாறே அனுமதி பெறப்பட்டு, சில விடயங்கள் செய்துகொடுக்கப்படும் பட்சத்தில், அது மாகாண சபையால் செய்யப்பட்டது என்றே கருதப்படுகின்றது. உதாரணமாக, ஊவா மாகாண சபை மூலம் ஒருவிடயம் நடைபெறுமாயின், அதற்கான பெயர் நமக்கு வந்தடையாமல், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியையே சென்றடைகின்றது” என்று அவர் கூறியுள்ளார்.

“நான் எதிரணியில் இருக்கும் போது, எப்போது தம்புளைக்குச் சென்றாலும், வெறும் கையோடே திரும்பி​யிருக்கின்றேன். இதை நினைத்து, நான் இன்னும் வெட்கப்படுகின்றேன்” என்றும் அவர் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .