Kogilavani / 2016 ஜூன் 29 , மு.ப. 04:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
வீதிகளைச் செப்பனிடாமல் விட்டால், 6 பாதைகளுக்கான பஸ் சேவைகளை எதிர்வரும் முதலாம் திகதியுடன் நிறுத்திக்கொள்ளப் போவதாக இலங்கை போக்குவரத்து சபையின் ஹட்டன் பிராந்திய முகாமையாளர் தெரிவித்துள்ளார்.
மஸ்கெலியா-மறே, மஸ்கெலியா- காட்மோர், நோட்டன்- கொத்தலன்ன, நோட்டன் -கலவல்தெனிய, நோட்டன் -பேரகல்ல, நோட்டன்- பொல்பிட்டிய ஆகிய 6 பாதைகளுக்கான சேவைகளே நிறுத்தப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இவ்விடயம் தொடர்பாக, அமைச்சர் பழனி. திகாம்பரம், இராஜங்க அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன், மத்திய மாகாண சபை முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க மற்றும் மத்திய மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சர், நோர்வூட் வீதி அபிவிருத்தி சபையின் உயர் அதிகாரி ஆகியோருக்கு அறிவித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, மேற்குறிப்பிட்டுள்ள பகுதிகளிலுள்ள வீதிகளைச் செப்பனிட வேண்டும். இல்லையேல் பஸ் செல்ல முடியாது.
நாளொன்றுக்கு ஒரு பஸ் உடைந்து போவதால், ஹட்டன் பஸ் டிப்போவை கொண்டு நடத்த முடியாத நிலை தோன்றியுள்ளதாகவும் இவற்றைச் சரி செய்ய பெரும் நிதி தேவைப்படுகின்றது என்றும் அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது' என தெரிவித்தார்.
பஸ் சேவைகள் நிறுத்தப்பட்டால் பாடசாலை மாணவர்கள், அரச உத்தியோகத்தர்கள் உட்பட பலர் பாதிக்கப்படுவர் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
11 Apr 2026
11 Apr 2026
11 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 Apr 2026
11 Apr 2026
11 Apr 2026