2026 ஏப்ரல் 04, சனிக்கிழமை

"செமட செவன" திட்டத்தின் கீழ் கூட்டணிக்கு கணிசமான வீடுகள்

Kogilavani   / 2016 ஜூன் 01 , மு.ப. 03:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.கணேசன்

தேசிய வீடமைப்பு அமைச்சினால் முன்னெடுக்கப்படும்„ “செமட்ட செவன” திட்டத்தின் கீழ், நுவரெலியா மாவட்டத்தில் 1,000 இற்கும் மேற்பட்ட வீடுகள், நிர்மாணிக்கப்படவுள்ளதாக மத்திய மாகாண சபை உறுப்பினர் எஸ்.ஸ்ரீதரன், தமிழ்மிரருக்கு நேற்று செவ்வாய்க்கிழமை (31) தெரிவித்தார்.

இதற்கமைவாக, தமிழ் முற்போக்குக் கூட்டணியின் உறுப்பினர்களான அமைச்சர் ப.திகாம்பரம், இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன், நாடாளுமன்ற உறுப்பினர் எம்.திலகராஜ் ஆகியோருக்கு, தலா வீடுகள் பிரித்துக் கொடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

இது தொடர்பில் தொடர்ந்து கருத்துரைத்த அவர், 'மலையக மக்கள் எதிர்கொள்ளும் வீடமைப்பு பிரச்சினையை நிவர்த்தி செய்யும் வகையில், தேசிய வீடமைப்பு அமைச்சினால் 'செமட்ட செவன' திட்டத்தின் கீழ் வீடுகள் நிர்மாணித்துக் கொடுக்கப்படவுள்ளன. இதன் அடிப்படையில், பயனாளி ஒருவருக்கு, 2 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்.  பயனாளிகள் தங்களது சொந்தப் பணத்தில் மேலதிகமாக செலவளித்து வீட்டை விஸ்தீரமாக நிர்மாணித்துக்கொள்ள முடியும்' என்றார். இவ்வீட்டுத் திட்டத்தின் கீழ், ஒரு வீட்டுக்கு சுமார் 9 இலட்சம் மதிப்பிடப்பட்டுள்ளதாகவும் பயனாளிகள் தாங்கள் விரும்பும் பட்சத்தில், 20 இலட்சத்திலும் அவ்வீட்டை நிர்மாணித்துக்கொள்ள  முடியுமெனவும் அவர் கூறினார்.

இதனடிப்படையில், கொட்டகலை - யுனிபீல்ட் தோட்டத்தில் 25 வீடுகளுக்கான அடிக்கல் நாட்டப்பட்டதோடு லிந்துலை, தலங்கந்தை தோட்டத்திலும் 25 வீடுகளுக்கான அடிக்கல் நாட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .