Kogilavani / 2015 ஒக்டோபர் 28 , மு.ப. 08:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின்;; ஸ்தாபகத் தலைவர் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமானின் 16ஆவது சிரார்த்த தினம் நாளை 30ஆம் திகதி கொழும்பிலும் மலையகத்திலும் அனுஷ்டிக்கப்படவுள்ளது.
அன்றைய தினம் காலை, கொழும்பு பழைய நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் அமைந்துள்ள அவரது உருவச்சிலைக்கு மலர் மாலை அணிவிக்கப்படவுள்ளதுடன் இ.தொ.கா தலைமையகமான சௌமிய பவனில் அமைந்துள்ள ஸ்ரீ விநாயகர் ஆலயத்தில் விசேட பூஜை வழிபாடு இடம்பெறவுள்ளது.
இந்நிகழ்வில், இ.தொ.கா பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகன் தொண்டமான், இ.தொ.கா தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான முத்து சிவலிங்கம், இ.தொ.கா உப தலைவர்கள் உட்பட பலர் கலந்துகொள்ளவுள்ளனர்.
அமரரின் நினைவாக 'காங்கிரஸ் மாத இதழ்' வெளியிடப்படவுள்ளது. இதழின் முதல் பிரதியை பொதுச் செயலாளர் ஆறுமுகன் தொண்டமான், தலைவர் முத்து சிவலிங்கம் ஆகியோர் பெற்றுக்கொள்ளவுள்ளனர்.
6 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
1 hours ago