2026 ஏப்ரல் 13, திங்கட்கிழமை

'சுற்றுநிரூபத்தின்படி கடமையாற்றுங்கள்'

Kogilavani   / 2016 ஓகஸ்ட் 23 , மு.ப. 03:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

டி.ஷங்கீதன்

அரசியல்வாதிகளும் அமைச்சர்களும் சிபாரிசுக் கடிதங்கள் கொடுக்கலாம். அதனை ஏற்றுக்கொள்வதும் நிராகரிப்பதும் அதிபர்களின் கைகளிலேயே தங்கியுள்ளது. அதிபர்கள், சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளவாறு தமது கடமைகளை முன்னெடுத்தால், எந்த பிரச்சினையும் ஏற்படாது' என இராஜாங்க கல்வி அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

நுவரெலியா மாவட்ட அபிவிருத்தி இணைப்பு குழுக் கூட்டம், நுவரெலியா மாவட்ட செயலகத்தின் ஆச்சரிய மண்டபத்தில், நேற்றுத் திங்கட்கிழமை நடைபெற்றது.

குழுவின் இணைத்தலைவர்களான மத்திய மாகாண சபையின் முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க, நாடாளுமன்ற உறுப்பினர்களான ஆறுமுகன் தொண்டமான், கே.கே.பியதாச ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர் கூறியதாவது,

'தற்போது நடைபெற்றுவரும் கல்விப் பொதுத்தராதர உயர்தர பரீட்சையில், பல்வேறு குளறுபடிகள் ஏற்பட்டுள்ளன. இது தொடர்பாக, கல்வி அமைச்சு முக்கிய தீர்மானங்களை எடுத்துள்ளது.

க.பொ.த உயர்தர பரீட்சைக்கு, மாணவர்களை தெரிவுசெய்து அனுப்புவது முதல் அனைத்து விடயங்களையும் அதிபர்களே மேற்கொண்டு வருகின்றனர். பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கும் மாணவர்கள் தொடர்பான சான்றிதழ்களையும் விபரங்களையும் அதிபர்களே அனுப்பி வைக்கின்றனர். இதன் காரணமாக, மேற்படி குளறுபடிகள் வெளியில் வராமல் பாதுகாக்கப்பட்டு வந்தததுடன், அதிபர்களுக்கு மட்டுமே தெரிந்த ஒரு விடயமாகவும் இருந்து வந்தது. ஆனால், இவ்விடயத்தில் எதிர்வரும் 2017ஆம் ஆண்டு முதல் பல மாற்றங்கள் கொண்டுவரப்படவுள்ளன. க.பொ.த உயர்தர விடயங்களில், பரீட்சைகள் ஆணையாளர் நாயகமும் சம்பந்தப்படும் வகையில், புதிய மாற்றுத் திட்டம் அறிமுகம் செய்யப்படவுள்ளது.  இதைத் தவிர இன்னும் பல புதிய நடைமுறைகளை கல்வி அமைச்சு அறிமுகம் செய்யவுள்ளது' என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .