2026 ஏப்ரல் 12, ஞாயிற்றுக்கிழமை

'சிறுவர் தொழிலாளர்களை அறியத்தரவும்'

Kogilavani   / 2016 ஜூலை 28 , மு.ப. 03:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

மொஹொமட் ஆஸிக்

கண்டி மாவட்டத்துக்கு உட்பட்ட பகுதிகளில் எங்கேயாவது 18 வயதுக்கு உட்பட்டவர்கள், அவர்களது வயதுக்கு பொறுத்தமற்ற தொழில் ஈடுபடுத்தப்பட்டிருந்தலோ அல்லது 14 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் தொழில்களில் அமர்த்தப்பட்டிருந்தாலோ உடனே அதிகாரிகளுக்கு அறியத்தருமாறு கண்டி மாவட்டச் செயலகம் கோரியுள்ளது.
2016ஆம் ஆண்டில், கண்டி மாவட்டத்தை சிறுவர் தொழிலாளர்களற்ற மாவட்டமாக மாற்றியமைப்பதற்கான திட்டத்தை நடைமுறைப்படுத்தவுள்ளதாக கண்டி மாவட்டச் செயலகம் அறிவித்துள்ளது.

இத்திட்டத்தை நடைமுறைப்படுத்தும் நோக்குடன், மாவட்டத்தைச் சேர்ந்த அரசாங்க ஊழியர்களுக்கு அறிவூட்டும் நிகழ்வுகள் தொடர்ச்சியாக தற்போது நடைபெற்று வருகின்றன.

அவ்வரிசையில் அக்குறணை பிரதேச செயலக ஊழியர்களுக்கு அறிவூட்டும் நிகழ்வு, அலவத்துகொடையில் அமைந்துள்ள அக்குறணை பிரதேச சபைக் கேட்போர் கூடத்தில் செவ்வாய்க்கிழமை (26) நடைபெற்றது.

இதன்போதே மேற்படி செயலகத்தின் அதிகாரிகள் இக்கோரிக்கையை முன்வைத்தனர். அக்குறணை பிரதேச செயலாளர் மாதவ வர்ணகுலசூரிய தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், கண்டி மாவட்ட சிரேஷ்ட தொழில் அதிகாரி திருமதி துலானி திசாநாயக்க கலந்துகொண்டு உரையாற்றும்போது,

'18 வயதுக்குக் குறைந்த அனைவரும் சிறுவர்கள் என்றே கருதப்படுகின்றனர். 14 தொடக்கம் 18 வயதுக்கு உட்பட்டவர்களை குறிப்பிட்ட சில தொழில்களில், நிபந்தனை அடிப்படையில் ஈடுபடுத்த முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், 14 வயதுக்குக் குறைந்த எவரையும் எந்த தொழிலும் ஈடுபடுத்த முடியாது' என கூறினார்.

'இவ்வாண்டின் நிறைவுக்குள் சிறுவர் ஊழியர்களற்ற மாவட்டமாக கண்டி மாவட்டத்தை பிரகடனப்படுத்துவதற்காக,  ஒவ்வொருவரும் முழு முயற்சியுடன் பணியாற்ற வேண்டும்.

இந்நிலையில் இம்மாவட்டத்தில் எங்கேயாவது 18 வயதுக்குக் குறைந்த சிறுவர்கள், அவர்களுக்கு பொறுத்தமற்ற தொழில்களில் ஈடுபடுத்தப்பட்டிருந்தாலோ, 14 வயதுக்குக் குறைந்த சிறுவர்கள் ஏதேனும் ஒரு தொழிலில் ஈடுபடுத்தப்பட்டிருந்தாலோ உடனடியாக அறியத்தர வேண்டும்' என அவர் கோரினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .