Sudharshini / 2016 ஜூன் 29 , பி.ப. 06:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
மு.இராமசந்திரன், ரஞ்சித் ராஜபக்ஷ
நுவரெலியா மாவட்டத்திலுள்ள சில சதொச நிலையங்கள், ரூ.500க்கு குறைய பொருட்களை கொள்வனவு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு சீனியை விற்பனை செய்ய மறுத்து வருவதாக நுகர்வோர் கவலை தெரிவிக்கின்றனர்.
நுகர்வோருக்கு சீனியை விற்பனை செய்ய மறுக்கும் சதொச நிலையங்கள், தனியார் கடைகளுக்கு மொத்த விலையில் சீனியை விற்பனை செய்து வருவதாகவும் பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ள தாம் இதனால் சிரமங்களை எதிர்கொண்டுள்ளதாகவும் வாடிக்கையாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
இதுதொடர்பில் சதொச நிலைய அதிகாரியிடம் வினவியப்போது, 'வாடிக்கையாளர்கள் 87 ரூபாய்க்கு சீனியை பெற்று ஏனைய வர்த்தக நிலையங்களுக்கு விற்பனை செய்வதாக எமக்கு தகவல் கிடைத்தது. இதனால், 500 ரூபாக்கு பெருமதியான பொருட்களை கொள்வனவு செய்வேருக்கு மட்டும் சீனியை விற்பனை செய்து வருகின்றோம்' என்றார்.
9 hours ago
11 Apr 2026
11 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
11 Apr 2026
11 Apr 2026