Kogilavani / 2017 மே 16 , பி.ப. 05:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
மாத்தளை மாவட்டத்தில், கடந்த ஐந்து மாதங்களில் 519 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாகவும்ரவிந்திர விராஜ் அபயசிறி
மாத்தளை மாவட்டத்தில், கடந்த ஐந்து மாதங்களில் 519 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாகவும், இவர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் மாத்தளை மாவட்ட சுகாதார பிரிவின் பணிப்பாளர் டி.எம்.விஜேகோன் தெரிவித்தார்.
“கடந்த காலங்களில், இம்மாவட்டத்தில் டெங்கு நுளம்பை கட்டுப்படுத்துவதற்கான வேலைத்திட்டங்களை முன்னெடுத்தப் போதிலும் அரச அதிகாரிகளின் பூரண ஒத்துழைப்பு கிடைக்கவில்லை” என்றும் அவர் கூறினார்.
மாத்தளை மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டம், குழுவின் தலைவரும் மாத்தளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ரஞ்சித் அலுவிஹார தலைமையில், மாத்தளை மாவட்டக் காரியாலயத்தில் நேற்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே, அவர் இவ்வாறு கூறினார்.
மேலும் கூறிய அவர்,
“டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்தின் கீழ், மாத்தளை மாவட்டத்திலுள்ள அரச அலுவலகங்களை சோதனைக்கு உட்படுத்தியபோது, 17 அரச நிறுவனங்கள், டெங்கு நுளம்பும் பெருகும்வகையில் சூழலை வைத்திருந்தன.
கிராம மட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்துக்கு, அரச அதிகாரிகளின் பூரண ஒத்துழைப்பு கிடைக்கவில்லை. இதனால் அசௌகரியங்களை எதிர்கொள்ள நேரிட்டது. எனவே, மாத்தளை மாவட்டத்தில் டெங்கு நுளம்பை கட்டுப்படுத்துவதற்கு, அரச அதிகாரிகளின் பூரண ஒத்துழைப்பை பெற்றுத்தர வேண்டும்” என்று அவர் இதன்போது கோரிக்கை விடுத்தார்.
58 minute ago
2 hours ago
8 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
58 minute ago
2 hours ago
8 hours ago
8 hours ago