Kogilavani / 2017 மே 02 , பி.ப. 03:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
மு.இராமச்சந்திரன்
“புதிய அமைப்பாளர்களின் ஆதரவோடு, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி மேலும் வலுப்பெற்றுள்ளமையை, கட்சியின் மே தின கூட்டம் பறைசாற்றுகின்றது. ஒருசிலர் மக்கள் கூட்டத்தைக் கண்டவுடன், தேர்தலை உடனடியாக நடத்துமாறு கூறுகின்றனர். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான அரசாங்கம், ஒருபோதும் தேர்தல்களுக்கு அஞ்சியது கிடையாது” என்று, ஸ்ரீ.சு.காவின் நுவரெலியா மாவட்ட அமைப்பாளர் பெரியசாமி பிரதீபன் தெரிவித்தார்.
“கண்டி, கெட்டம்பே மைதானத்தில் இம்முறை நடைபெற்ற ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மேதின கூட்டமானது, சரித்திர முக்கியத்துவம் வாய்ந்தக் கூட்டமாக அமைந்திருந்தது” என்றும் அவர் கூறினார்.
ஹட்டனில், இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே, அவர் இவ்வாறு கூறினார். அங்கு மேலும் கூறிய அவர்,“நுவரெலியா மாவட்டம் மட்டுமல்லாது, மலையகத்தின் சகல மாவட்டங்களிலிருந்தும் பெருவாரியான தோட்டத் தொழிலாளர்கள், ஸ்ரீ.சு.காவின் மேதின கூட்டத்தில் கலந்துகொண்டிருந்தனர். நல்லாட்சி அரசாங்கத்துக்கு எதிராக செயற்படும் இனவாத சக்திகள், ஸ்ரீ.சுகாவின் புதிய அமைப்பாளர்களுக்கு பலமில்லை என்று கூறியிருந்தனர். அவர்கள் கூறியக் கருத்தை பொய்யாக்கும் வகையில், ஸ்ரீ.சு.காவின் புதிய அமைப்பாளர்கள் செயற்பட்டுள்ளனர்” என்று அவர் மேலும் கூறினார்.
17 minute ago
46 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
46 minute ago