2026 ஏப்ரல் 04, சனிக்கிழமை

'தொழிலாளர் தேசிய சங்கத்தின் தொழிற்சங்க பலத்தை மேம்படுத்த வேண்டும்';ஸ்ரீதரன்

Sudharshini   / 2016 மே 31 , மு.ப. 09:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.கணேசன்

'அபிவிருத்தி வேலைத்திட்டங்களை மட்டும் வைத்து எமது கட்சியை வலுப்படுத்த முயற்சிக்கக்கூடாது. எமது கட்சிக்கான தொழிற்சங்க பலத்தை மேம்படுத்த வேண்டும்' என மத்திய மாகாண சபை உறுப்பினரும் தொழிலாளர் தேசிய சங்கத்தின் அமைப்பாளருமான எஸ்.ஸ்ரீதரன் தெரிவித்தார்.

'நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அனர்த்த நிலைமைகளில், மக்களோடு மக்களாக இருந்து அவர்களுக்குரிய தேவைகளை நிறைவேற்றிக்கொடுப்பதோடு,  உரிய நடவடிக்கைகளை துரிதமாக பெற்றுக்கொடுக்க வேண்டும். மக்களுக்கான சேவைகளை எம்மால் முடிந்தவரை வழங்கி, எமது தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரது கரங்களை பலப்படுத்தவேண்டும்' என்றும் அவர் கூறினார்.

தொழிலாளர் தேசிய சங்கத்தின் அமைப்பாளர்கள் மற்றும் கட்சி முக்கியஸ்தர்களின்  கூட்டமொன்று ஹட்டனில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை கூறினார்.

அங்கு மேலும் கூறிய அவர்,  'இலங்கையின் நல்லாட்சி அரசாங்கத்தோடு இணைந்து அந்நல்லாட்சி அரசாங்கத்தின் சேவைகளை எமது மலையக மக்களுக்கு பெற்றுக்கொடுப்பதில் தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் அமைச்சருமான திகாம்பரம் முணைப்புடன் செயற்படுகின்றார். இவ்வாறான நல்லாட்சி அரசாங்கத்தின் வேலைத்திட்டங்கள், எமது அமைச்சரின் வேலைத்திட்டங்கள் மற்றும் கட்சியின் வேலைத்திட்டங்கள் என்பன எமது மக்களை சென்றடைவதில் எமது கட்சியை சார்ந்த அமைப்பாளர்கள் உள்ளிட்ட கட்சி முக்கியஸ்தர்களின் பங்களிப்பு இன்றியமையாதது' என்றார்.

'மக்கள் சேவைகளினாலும் வேலைத்திட்டங்களினாலும் தொழிலாளர் தேசிய சங்கமானது இன்று ஓர் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சரையும் ஒரு நாடாளுமன்ற உறுப்பினரையும், மூன்று மாகாண சபை உறுப்பினர்களையும் கொண்டு நாட்டின் முக்கிய கட்சியாக மாற்றமடைந்து வருகின்றது.

அமைச்சர் ப.திகாம்பரம் தொழிலாளர் தேசிய சங்கத்தை பொறுப்பேற்று  ஒரு தசாப்தகாலமாகின்ற நிலையில், இன்று எமது சங்கமானது புத்துணர்ச்சி பெற்று இவ்வாறானதொரு பாரிய வளர்ச்சியை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது' என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .