Niroshini / 2016 ஓகஸ்ட் 13 , மு.ப. 04:50 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எம்.செல்வராஜா
ஜனாதிபதியும் பிரதமரும் சிறுபான்மையினருக்கு அரிய நல்ல பல திட்டங்களை முன்னெடுத்து கொண்டிருக்கின்றனர். ஆனால் தமிழ் அமைச்சர்கள் தத்தமது கவனக்குறைவினாலும், அவர்களது இயலாமையினாலும் தமிழ் மக்களை பாதுகாக்க முடியாமல் இருந்து வருகின்றனர். ஆகையினால் எமது மக்களை பாதுகாப்பதற்கு இ.தொ.கா, ஜனாதிபதி,பிரதமர்,நிதி அமைச்சர் ஆகியோரின் கவனத்திற்கு குறிப்பிட்ட விடயங்களை கொண்டு செல்லவுள்ளதாக ஊவா மாகாண அமைச்சர் செந்தில் தொண்டமான் தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,
“கொழும்பில் பல வர்த்தக நிலையங்கள் பலவற்றில், சுங்கத் திணைக்களத்தினால் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது இறக்குமதிவரி முறையாக செலுத்தியிருந்த போதிலும் அதிரடி சோதனை யின்பின்னரே சீல்வைக்கப்பட்டுள்ளதாக கூற்படுகின்றது .இதற்கமைய 14க்கும் மேற்பட்ட வர்த்தக நிலையங்கள் பாதிக்கப்பட்டுள்ளன .இச்செயற்பாடானது முற்றிலும் அதிருப்தியானதாகும்.
இவ்வர்த்தக நிலைய உரிமையாளர்கள் தனிநபர்க்ள் இல்லை. அவர்களை நம்பி மலையக இளைஞர்கள் பலர், இவ்வர்த்தக நிலையங்களில் தொழில் புரிந்து வருகின்றனர். இவ்வர்த்தக நிலையங்களை சீல் வைக்கும் வகையில் அங்கு போதைப் பொருட்களோ, அரசாங்கத்தினால் தடைசெய்யப்பட் பொருட்களோ இருந்திருக்க வில்லை.
இறக்குமதி வரி செலுத்த வில்லை என்று கூறியே சீல் வைக்கப்பட்டிருக்கின்றது. ஏற்கெனவே, கடந்த காலங்களில் மாற்று சமுகத்தை சார்ந்தவர்கள் இற்க்குமதி வரி செலுத்தாத காரணத்தினால் அவர்களுக்கு அபராதம் மற்றும் சட்டபூர்வ நடவடிக்கைகள் மேற்கொள்ளபட்டிருந்தன. ஆனால், தற்போதைய நிலையில் தமிழ் வர்தகர்கள் இறக்குமதி வரி செலுத்தவில்லை என்று கூறி, அவர்களுக்குறிய வர்த்தக நிலையங்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளன. இதனால் தமிழர்களுக்குரிய வர்த்தகதுறை முற்றுமுழுதுமாக முடக்கப்பட்டுள்ளன.
இவ்விடயத்தில், தமிழ் அமைச்சர்கள் கூடிய கவனம் எடுத்திருக்கவேண்டும். இது அவர்களது கடமையுமாகும். ஆனால் அவர்களோ பாராமுகமாகவே இருந்து வருகின்றனர். அவர்களுடைய இவ் அலட்சியபோக்கு, அவர்களுடைய இயலாமையை மீண்டும் மீண்டும் தொடர்ந்து வெளிப்படுத்திருக்கின்றது” என்றார்.
5 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
5 hours ago