2026 ஏப்ரல் 18, சனிக்கிழமை

'தற்கொலை செய்து கொள்வதற்கு காரணம் வறுமை அல்ல'

Niroshini   / 2016 செப்டெம்பர் 10 , மு.ப. 06:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மொஹொமட் ஆஸிக்

தற்கொலை செய்து கொள்வதற்கு காரணம் வறுமை அல்ல என்றும் உலகில் அதிகம் தற்கொலை செய்து கொள்பவர்களும் தற்கொலைக்கு முயற்சி செய்பவர்களும்  அதிக வசதி படைத்தவர்களும் படித்தவர்களுமே ஆவர் என்றும் விஷேட வைத்திய நிபுணர் ஆரியசேன யூ.கமகே தெரிவித்தார்.

உலக தற்கொலை தடுப்பு தினத்தை முன்னிட்டு, கண்டி - முல்கம்பளை சுமித்ரயோ நிலையத்தில்  இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர்,

“தற்கொலை தொடர்பாக எமது சமூகத்தில் பல தப்பான அபிப்பிராயங்கள் நிலவுகின்றன. தற்கொலைக்கு காரணம் வறுமை என்று அதிகமானவர்கள் நினைக்கின்றனர். இருந்தபோதும் அது முற்றிலும் பொய்யானதாகும். தற்கொலை செய்து கொள்ளும் எண்ணம் வருவதற்கு பரம்பரையாக வரும் அணுக்களும், மன நிலையின ஸ்திரமற்ற தன்மையுமே காரணமாக அமைகின்றது.

உலகில் தற்கொலை செய்து கொண்டவர்களையும் தற்கொலை செய்து கொள்வதற்கு முயற்சித்தவர்களையும் பார்த்தால் கூடியவர்கள் வைத்தியர்கள், சட்டத்தரணிகள், விஞ்ஞானிகள், மற்றுமல்லாமல் நொபல் பரிசு பெற்றவர்களும் உள்ளனர். இதற்கு காரணம் அவர்கள் மற்றவர்களை விட வேறு விதமாக சிந்திப்பதாகும்.

தற்கொலை செய்து கொள்ள எண்ணுபவர்கள் அது சம்பந்தமாக ஆரம்ப சமிஞ்சைகளை வெளிப்படுத்ததுகின்றனர். அவ்வாறான ஏதேனும் சமிஞ்சை தெரிய வந்தால் அவர்களை தடுத்து நிறுத்துவதற்கு முயற்சிக்க வேண்டும்” என்றும் அவர்  தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .