2026 ஏப்ரல் 13, திங்கட்கிழமை

“நூரளை மைதானம் அபிவிருத்தி செய்யப்படும்”

Kogilavani   / 2016 ஓகஸ்ட் 21 , மு.ப. 11:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

டி.ஷங்கீதன்

80 மில்லியன் டொலர் செலவில், நுவரெலியா பொதுமைதானம் அபிவிருத்தி செய்யப்படவுள்ளதாகவும் இதற்கான அபிவிருத்தி வேலைத்திட்டங்கள், எதிர்வரும் இரண்டு மாதங்களில் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

நுவரெலியா பொதுமைதானத்தில் சனிக்கிழமை(20) நடைபெற்ற குதிரை பந்தய விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இங்கு தொடர்ந்துரைத்த அவர்,  'இலங்கையின் சுற்றுலாத்துறையானது இவ்வருடம், 19 சதவீதத்தால்  முன்னேற்றமடைந்துள்ளது. இதனால் அதிக வருமானம் கிடைத்து வருகின்றது. இந்த வருமானத்தை எதிர்காலத்தில் மேலும்  அதிகரிக்க வேண்டும் என்பதே எனது நோக்கமாகும். அதற்காக நாங்கள் நாட்டின் பலவேறு பகுதிகளிலும் தற்பொழுது அரசாங்கம் அபிவிருத்தி வேலைத்திட்டகளை முன்னெடுத்து வருகின்றோம்' என்றார்.

'விளைiயாட்டுத்துறை அமைச்சை பொருத்தவரையில், எமது அமைச்சும் இந்த நாட்டின் அந்நிய வருமானத்தை ஈட்டித்தருவதில் பாரிய பங்களிப்பு செய்து வருகின்றது. அந்த அடிப்படையில் எமது அமைச்சின் மூலமாக இன்னும் இரண்டு மாதத்தில் நுவரெலியா பொது விளையாட்டு மைதானத்தை பிரான்ஸ் நாட்டின் நிதி உதவியுடன், அதாவது 80 மில்லியன் டொலர்  முதலீட்டின் மூலமாக முழுமையாக அபிவிருத்தி செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

நுவரெலியா மைதானம் 125 ஏக்கர் நிலப்பரப்பை கொண்டது. இம்மைதானத்தை அபிவிருத்தி செய்வதனூடாக வெளிநாட்டு விளையாட்டு வீரர்கள் இங்கு வருகைத் தந்து பயிற்சிகளை முன்னெடுக்க முடியும். கிரிக்கெட் மற்றும் குறுந்தூர ஓட்ட வீரர்களுக்கு இக்காலநிலை மிகுந்த  உகந்த ஒரு காலநிலையாகும். இதன்மூலம் பலவிதமான விளையாட்டுப் போட்டிகளை சர்வதேச ரீதியில்   நடத்த முடியும்' என அவர் கூறினார்.

'முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் நவீன் திசாநாயக்க, இந்த மைதானத்தை அபிவிருத்தி செய்வதில் அதிக அக்கறையுடன் செயற்பட்டுள்ளார்.  இந்த மைதானம் முழுமையாக அபிவிருத்தி செய்யப்படுகின்றபோது, அதனை சூழவுள்ள பகுதிகளும் அபிவிருத்தி அடைய வேண்டும்' என்றார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .