2026 ஏப்ரல் 04, சனிக்கிழமை

'பெட்டிகல மக்களுக்கு விரைவில் தீர்வு கிடைக்கும்'

George   / 2016 மே 13 , மு.ப. 04:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

'பலாங்கொடை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பெட்டிகல தோட்டத்தில் மண்சரிவு அபாயத்துக்குட்பட்டுள்ள 26 குடும்பங்களுக்கு உதவிகளை வழங்குமாறு அழுத்தம் கொடுக்க தமிழ் முற்போக்கு கூட்டணி உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும்" என மலையக மக்கள் முன்னணியின் உபதலைவர் ரூபன் பெருமாள் தெரிவித்துள்ளார்.

பெட்டிகல தோட்டத்தில், தேயிலை தொழிற்சாலைக்கு அருகில் அமைந்துள்ள தோட்டக்குடியிருப்புக்கள், தோட்ட நிர்வாகிகளின் குடியிருப்புக்கள், கூட்டுறவு நிலையம் மற்றும் சிறுவர் பராமரிப்பு நிலையம் உள்ளிட்ட கட்டடங்களுக்கு மண்சரிவு அபாயநிலை காணப்படுவதாக தேசிய கட்டட ஆய்வு மையத்தினால் 2015.01.05ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட களப்பரிசோதனையின் மூலம் பெறப்பட்ட ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனையடுத்து, கடந்த ஒருவார காலமாக இப்பிரதேசத்தில் பெய்த கடும் மழை காரணமாக மேலும் சில தோட்டக்குடியிருப்புக்கள், கட்டடங்கள் வெடிப்புக்குள்ளானதனையடுத்து இப்பிரதேசத்தில் வாழும் 26 குடும்பங்களைச் சேர்ந்த 124பேர் இது தொடர்பில், பலாங்கொடை பிரதேச செயலாளரின் கவனத்துக்கு கொண்டு வந்தனர்.

அதனையடுத்து, இடர் முகாமைத்துவ மத்திய நிலையத்தினூடாக தோட்ட மருத்துவமனைக்கு அருகாமையில் தற்காலிக கூடாரங்கள் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளன.

இவ்விடயம் தொடர்பாக தகவலறிந்த மலையக மக்கள் முன்னணியின் உபதலைவர் ரூபன் பெருமாள் நேரடியாகச்சென்று பாதிப்புக்குள்ளான தோட்ட மக்களை சந்தித்ததுடன், இவ்விடயம் தொடர்பாக கல்வி இராஜாங்க அமைச்சர் இராதாகிருஷ்ணன், நாடாளுமன்ற உறுப்பினர் எம்.திலகராஜ் ஆகியோரை தொடர்புகொண்டு தெரியப்படுத்தியுள்ளார்.

அத்துடன், விரைவில் தகுந்த நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்வதாக பாதிக்கப்பட்ட மக்களிடம் ரூபன் பெருமாள் உறுதியளித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .