2026 ஏப்ரல் 17, வெள்ளிக்கிழமை

பாதையை புனரமைக்க கோரிக்கை

Kogilavani   / 2016 செப்டெம்பர் 11 , மு.ப. 06:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

நோர்வூட் போற்றி தோட்டத்தில், சுமார் 3 கிலோமீற்றர்; வரையான பாதையானது, குண்டும் குழியுமாக காணப்படுவதால் இப்பதையை பயன்படுத்தும் பாடசலை மாணவர்கள் முதல் பொதுமக்கள் வரை பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

இப்பாதையை எல்படை, போயிஸ்டன், இஞ்சஸ்ற்றி, புளியாவத்தை, சாஞ்சிமலை, வானக்காடு, எல்படை மேற்பிரிவு, கீழ் பிரிவு மற்றும் கெர்;க்கஸ்வோல்ட் மேற்பிரிவு, கீழ் பிரிவு, மத்திய பிரிவு ஆகிய தோட்டங்களை சேர்;ந்த மக்களும் வாகன சாரதிகளும் பயன்படுத்தி வருகின்றனர்.
குறிப்பாக, நோர்வூட் மற்றும் டியன்சின் பிரதான பாதைகளுக்கிடையில் பாதிப்புகள் ஏற்படும்போதும், இப்பாதையை பயன்படுத்த கூடிய நிலையும் காணப்படுகின்றது.

எல்பட மற்றும் கெர்;க்கசோல்ட் ஆகிய தோட்டங்களுக்கு இதுவரை நடத்தப்பட்ட பஸ் சேவையினால் தமக்கான போக்குவரத்து பிரச்சினைகள் இல்லாமிலிருந்ததாகவும் தற்போது இப்பாதை பழுதடைந்து காரணத்தினால் பஸ் சேவையும் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக பிரதேச மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இதனால் தாம் பாரிய அசௌகரியங்களை எதிர்கொண்டுள்ளதுடன் கால்நடையாக நடந்தே தமக்கான தேவைகளை நிறைவேற்றிக்கொள்வதாகவும்  இவர்;கள் தெரிவிக்கின்றனர்  

எனவே, இப்பாதையை செப்பனிட்டு தருமாறு பிரதேச மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .