2026 ஏப்ரல் 18, சனிக்கிழமை

'பிரமிட்டை நம்பாதீர்கள்'

Kogilavani   / 2016 ஓகஸ்ட் 26 , மு.ப. 04:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

கு.புஷ்பராஜா

மலையக மக்களை இலக்கு வைத்து, விஷமிகளால் அறிமுகப்படுத்தப்பட்டுவரும் „பிரமிட்..., „குளோபல்... திட்டங்களை நம்பி ஏமாற வேண்டாமெனவும் இதனால், கடன் சுமை அதிகரிக்குமெனவும், பிரிடோ நிறுவனம், பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.

'சமூக வளர்ச்சிக்கு உந்துசக்தியாக விளங்கும் ஆசிரியர்கள் மற்றும் கற்றுத்தேரிய இளைஞர் - யுவதிகளே, இவ்விடயங்களை மக்களிடம் அறிமுகப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார்கள் என்பது, மிகவும் வேதனைக்குரிய விடயமாகும்' எனவும் அந்நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.

இது தொடர்பில், பிரிடோ நிறுவன வெளிக்கள இணைப்பாளர் எஸ்.கே.சந்திரசேகரன் மேலும் கூறியுள்ளதாவது:

'பெருந்தோட்ட மக்கள், கடனில் பிறந்து கடனிலேயே இறப்பவர்கள் என்ற பொதுவான கருத்து, சமூகத்தில் நிலவி வருகின்றது. ஆனாலும், இச்சமூகம் பல சவால்களை எதிர்கொண்டு, வாழ்க்கையில் முன்னேற முயற்சிக்கும்போது, அம்மக்களை மீளவும் கடன்காரர்களாக மாற்ற, ஏமாற்றுக்காரர்கள் முற்படுகின்றனர். இவர்கள் மக்கள் மத்தியில் புதிய புதியத் திட்டங்களை கொண்டு வருகின்றனர்.

ஆரம்பத்தில், „குளோபல்... என்ற திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இத்திட்டத்துக்;கூடாக, „இலகுவான முறையில் பணம் தேடலாம்... என தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அதிகமானவர்கள், தம்மிடமிருந்த தங்க நகைகளை அடகு வைத்தும் உறவினர்களிடம் கடன் வாங்கியும் சம்பந்தப்பட்டவர்களின் பெயரில் வைப்புச் செய்தனர். ஆனால் இறுதியில், அடகு வைத்த நகைகளை மீளப்பெறமுடியாமலும் பெற்றக் கடனை மீளச் செலுத்த முடியாமலும், குடும்பப் பிரச்சினை மற்றும் பொருளாதார பிரச்சினையில் சிக்குண்டுள்ளனர்.

இது இவ்வாறிருக்க, தற்போது, மலையக இளைஞர் - யுவதிகளை இலக்கு வைத்து, 'பிரம்மிட்" என்ற பெயரில் பணம் சம்பாதிக்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளனர்.  இத்திட்டத்தினூடாக, உழைக்காமலே பணம் சம்பாதிக்க முடியும் என்று கூறி, மக்களின் உழைப்பை சூரையாடும் சதித் திட்டங்களில், விஷமிகள் ஈடுபட்டு வருகின்றனர். அப்பாவி மக்களை ஏமாற்றும் மோசடிக்காரர்;கள், உழைக்காமலேயே பணத்தைச் சம்பாதிக்கின்றனர்.

சமூகத்தை நல்வழிப்படுத்த வேண்டிய பொறுப்புள்ள ஆசிரியர்களும் படித்த இளைஞர் - யுவதிகளும், இவ்வாறான மோசடித் திட்டங்களை மக்கள் மத்தியில் அறிமுகப்படுத்தி, மக்களை ஏமாற்றும் கைங்கரியங்களில் ஈடுபடுவதை அவதானிக்க முடிகின்றது.

குளோபல், பிரமிட் திட்டங்கள் அனைத்துமே மோசடியான திட்டங்கள். இந்த திட்டங்களால் அதை நடைமுறைப்படுத்தும் மோசடிக்காரர்;கள் மட்டுமே பணம் சம்பாதிக்க முடியும் என்பது மட்டுமே உண்மை. இத் திட்டங்களால் முன்னேறியவர்;கள் எவருமில்லை. பல குடும்பங்களில்
பாரதூரமான பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன. மலையக பகுதிகளில் அவ்வப்போது அறிமுகப்படுத்தப்படும் இவ்வாறான மோசடித் திட்டங்களால் மக்கள் ஏமாற்றப்படுவதை தடுப்பதற்கு மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்' என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .