2026 ஏப்ரல் 19, ஞாயிற்றுக்கிழமை

'புலமைப்பரிசிலுக்கான வாய்ப்பை தவறவிடக்கூடாது'

Kogilavani   / 2016 ஓகஸ்ட் 12 , மு.ப. 08:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

'கண்டி இந்திய உயர்ஸ்தானிகராலயம், பெருந்தோட்ட மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளில் அக்கறைக் கொண்டு செயற்படுகின்றது. இந்நிலையத்தினால் வழங்கப்படும் புலமைப் பரிசிலுக்கான வாய்ப்பை பெருந்தோட்ட மாணவர்கள் தவறவிடக்கூடாது' என இ.தொ.கா கோரியுள்ளது.

இது தொடர்பில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின்;  உப தலைவரும், சட்டதரணியுமான கா.மாரிமுத்து  தெரிவித்துள்ளதாவது, 'தோட்டத் தொழிலாளர் பிள்ளைகளின் எதிர்காலம் குறித்து, பல தொண்டு நிறுவனங்கள் அக்கறைக்கொண்டுள்ளதுடன், புலமைப்பரிசிலுக்கான வாய்;ப்புகளை வழங்கி வருகின்றன.

எனினும், கண்டி இந்திய உயர்ஸ்தானிகராலயம் வருடாவருடம் இதுபோன்ற வாய்ப்பை பெருந்தோட்ட  மாணவர்களுக்கு வழங்கி வருகின்றது. இந்த புலமைப்பரிசிலுக்கு மலையக மாணவர்கள் விண்ணப்பக்க வேண்டுமென இ.தொ.கா கோருகின்றது' என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .