Kogilavani / 2016 ஏப்ரல் 26 , மு.ப. 06:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆ.ரமேஷ்
'தோட்ட தொழிலாளர்களின் 2,500 ரூபாய் சம்பள அதிகரிப்பு தொடர்பிலான பிரேரணை நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்டு அங்கிகரிக்கப்பட்டுள்ளது. மே மாதம் 10 ஆம் திகதி குறித்த சம்பளத்தொகை தொழிலாளர்களுக்கு
கிடைக்காவிடின் அரசாங்கத்துடன் போராடுவேன்' என மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு மற்றும் சமூக சேவைகள் அமைச்சர் பழனி திகாம்பரம் தெரிவித்தார்.
இதுதொடர்பில் மேலும் கூறிய அவர்,
'தோட்ட தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வை தொழிற்சங்க பலம் கொண்டவர்கள்தான் பெற்றுக்கொடுக்க முடியும் என சிலர் கூறிவந்தனர். இதனை கம்பனிகளும் ஏற்றுக்கொண்டுள்ளன. ஆனால், 1000 ரூபாய் சம்பள உயர்வை பெற்றுத்தருவதாக கூறிய, தொழிற்சங்க பலமும் அதிகாரமும் கொண்டவர்கள் ஓடி ஒழிந்து விட்டனர்.
என்னை நம்பியும் எமது தமிழ் முற்போக்கு கூட்டணியை நம்பியும் வாக்களித்து, அரசியல் பலத்தை பெற்றுக்கொடுத்த தொழிலாளர்களுக்கு நாம், 2,500 ரூபாய்; சம்பள உயர்வை பெற்றுக்கொடுத்துள்ளோம். இதன்படி மே மாதம் 10ஆம் திகதி
அரசாங்கம் அறிவித்ததுபோல் 2,500 ரூபாய் மக்களுடைய சம்பளத்தில் இணைக்கப்படாமலிருந்தால் நான் அரசாங்கத்தோடு போராடுவேன்' என்றார்.
'இன்று, தோட்டத் தொழிலாளர்கள் எதிர்பார்த்த வேலைத் திட்டங்கள் தோட்டப் பகுதிகளில் நடந்தேறி வருகின்றன. அமைச்சரான நான் முன்னெடுக்கும் அபிவிருத்தி வேலைகளுக்கு சில பத்திரிகைகள் மூலம் பலர் விமர்சனங்களை
தெரிவித்து வருகின்றனர். இருந்தும் எதிர்வரும் டிசெம்பர் மாத இறுதிக்குள் 2,500 வீடுகளை முழுமையாக கட்டியமைத்து மக்களுக்கு கொடுக்கும் அதேவேளை, ஐந்து வருடங்களில் தனி வீடுகளை அமைத்து மலையகத்தில் மாற்றத்தைக் கொண்டு வருவேன்' என்றார்.
8 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
8 hours ago