Kogilavani / 2016 ஓகஸ்ட் 24 , மு.ப. 04:27 - 0 - {{hitsCtrl.values.hits}}

கேகாலை, தெஹியோவிட்ட, டென்ஸ்வத்தை தோட்டத்தில், அண்மையில் ஏற்பட்ட மண்சரிவு காரணமாகப் பெற்றோரை இழந்து, தமது சிறிய தந்தையின் அரவணைப்பில் வாழ்ந்து வரும் நான்கு பிள்ளைகளுக்கான கல்வி, வாழ்வாதாரத்துக்கான உதவிகள் வழங்குவதற்கு, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சௌமிய நிதியத்தின் முயற்சியின் பலனாக, கண்டியைச் சேர்ந்த பிரபல வைத்தியரான அஜே ஜயசீலன், இவ்வாழ்வாதார உதவிகளை வழங்க முன்வந்துள்ளார்.
கண்டி இந்திய உதவி உயர்ஸ்தானிகர் காரியாலயத்தில்;, கண்டி இந்திய உதவித்தூதுவர் ராதா வெங்கட்ராமன் தலைமையில், இன்று புதன்கிழமை (24) நடைபெறவுள்ள நிகழ்வின்போது, இந்நால்வருக்கும் வாழ்வாதாரத்துக்கான உதவிகள் வழங்கப்படவுள்ளன.
இதன்போது, ஆனந்த பைரவி (வயது 13), சத்தியரூபணி (வயது 10), லக்மினி பிரியா (வயது 8) ரவிந்திர பிரசாத் (வயது 5) ஆகிய பிள்ளைகளுக்கே, கல்வி மற்றும் வாழ்வாதாரத்துக்கான உதவிகள் வழங்கப்படவுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
3 hours ago
3 hours ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
3 hours ago
4 hours ago