2026 ஏப்ரல் 19, ஞாயிற்றுக்கிழமை

10,11 மற்றும் 12 ஆம் திகதிகளில் நேர்முகப் பரீட்சை

Sudharshini   / 2016 பெப்ரவரி 07 , பி.ப. 01:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

பா.திருஞானம்

பெருந்தோட்ட ஆசிரிய உதவியாளர்கள் 1,016 பேருக்கு நியமனம் வழங்க, கல்வியமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளதாக  இராஜாங்க கல்வி அமைச்சர் வீ. இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

இதுதொடர்பில் அவர், மேலும் தெரிவித்துள்ளதாவது,

கடந்த வருடம் ஆசிரிய உதவியாளர்களுக்கு நியமனம் வழங்கப்பட்ட போதும், 816 பேருக்கான நியமனம் வழங்கப்படாதிருந்தது. மேலும், நியமனம் பெற்று, பின்னர் இடை விலகிய 200 ஆசிரிய உதவியாளர்களுக்கு பதிலாக மேலும் 200 பேருக்கு நியமனம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதில், முதல் கட்டமாக 500 பேருக்கு நேர்முகப் பரீட்சை நடைபெறவுள்ளது.  சப்ரகமுவ மாகாண  விண்ணப்பத்தாரிகளுக்கான நேர்முகப் பரீட்சை உடுகல்வத்த அல்-மக்கியா முஸ்லிம் வித்தியாலயத்தில் எதிர்வரும் 10 திகதியும் மத்திய மற்றும் ஊவா மாகாண விண்ணப்பத்தாரிகளுக்கான  நேர்முகப் பரீட்சை, நுவரெலியா பரிசுத்த திருத்துவ கல்லூரியில் எதிர்வரும் 11 மற்றும் 12 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளன.

நேர்முகப் பரீட்சை நடைபெற்று 02 வாரங்களில் இவர்களுக்கான நியமனம் வழங்கப்படும். இதற்காக தெரிவுசெய்யபட்ட விண்ணப்பதாரிகளுக்குக் கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.  மிகுதியாகவுள்ள 516 பேருக்கு இன்னும் 02 மாதங்களுக்குள் நியமனம் வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இந்த நேர்முகப் பரீட்சையில் தெரிவு செய்யப்படும் உதவி ஆசிரியர்களுக்கு வெற்றிடமுள்ள பாடசாலைகளில் நியமனம் வழங்கப்படும்;. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .