Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 07, திங்கட்கிழமை
Princiya Dixci / 2015 நவம்பர் 15 , பி.ப. 01:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
'மலையக மண்ணுக்கு சமாதானம்' (Peace on Plantation Earth) என்ற தொனிப்பொருளில் இறைஆசி வேண்டிய மௌன விரதத்துடனான சர்வமத பிரார்த்தனை நிகழ்வொன்று, தலைநகர் கொழும்பில் செவ்வாய்க்கிழமை 17ஆம் திகதி இடம்பெறவுள்ளது என்று சௌமிய இளைஞர் நிதியத்தின் தலைவரும் சர்வமத சமாதான நிதியத்தின் ஊடக செயலாளருமான எஸ்.பி.அந்தோனிமுத்து தெரிவித்தார்.
சர்வமத சமாதான நிதியத்துடன் இணைந்து சௌமிய இளைஞர் நிதியம் ஏற்பாடு செய்துள்ள இந்நிகழ்வு, கொழும்பு- 7 பௌத்தாலோக மாவத்தையிலுள்ள லங்கா சபை ஆயர் இல்ல கேட்போர் கூடத்தில் காலை 10.00 மணிக்கு நடைபெறும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
மலையக மக்கள் முகங்கொடுக்கும் வாழ்வாதாரம் (சம்பள உயர்வு) உள்ளிட்ட அனைத்து பிரச்சினைகளுக்கும் நல்லதொரு தீர்வுடனான அமைதி மற்றும் சமாதானம், அந்த மக்களுக்கும் மண்ணிற்கும் கிடைக்க வேண்டியும் கொஸ்லந்தை, மீரியபெத்த அனர்த்தத்தில் மறைந்த ஆன்மாக்களது சாந்திக்காகவுமான இலக்கை கருவாக்கக் கொண்டு சர்வமத தலைவர்களது பங்களிப்புடன் இந்நிகழ்வு நடத்தப்படவுள்ளது என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
57 minute ago
3 hours ago