2026 ஏப்ரல் 18, சனிக்கிழமை

ரூ.1,000 சம்பளத்தை கோரி ஆர்ப்பாட்டம்

Kogilavani   / 2016 செப்டெம்பர் 26 , மு.ப. 05:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

 மு.இராமச்சந்திரன்

தேர்தல் காலத்தில் வாக்குறுதியளித்தவாறு, ஆயிரம் ரூபாய் சம்பளத்தை பெற்றுக்கொடுக்ககோரி பொகவந்தலாவை பிரதேச தோட்டத் தொழிலாளர்கள், பொகவந்தலா ஒலிரோசரி தமிழ் வித்தியாலயத்துக்கு அருகில், நேற்றுத் திங்கட்கிழமை (26) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தோட்டத் தொழிலாளர்களுக்கான கூட்டொப்பந்தம் காலாவதியாகிய 1 வருடமும் ஆறு மாதங்களும் முடிவடைந்ததுள்ளது. இந்த ஒன்றரை வருடத்தில் 9 சுற்று பேச்சுக்கள் நடந்தாலும் அவை அனைத்தும் தோல்வியிலே முடிவடைந்தன. அத்தியவசிய பொருட்களின் விலை அதிகரித்துள்ள நிலையில் பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளோம். தேர்தல் காலத்தில் ஆயிரம் ரூபாய் சம்பளம் பெற்றுத்தருவதாக கூறிய தொழிற்சங்கங்கள் உடனடியாக ஆயிரம் ரூபாய் சம்பளத்தை பெற்றுக்கொடுக்க வேண்டும். சம்பள உயர்வு பிரச்சினையில் அரசாங்கம் தலையீடு செய்து உடனடியான தீர்வை பெற்றுக்கொடுக்க முன்ரவேண்டும்' என ஆர்பாட்டத்தில் ஈடுபட்டோர் தொரிவித்தனர்.

மேற்படி ஆர்ப்பாட்டத்தில் கொட்டியாகலை தோட்டத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் கலந்துகொண்டதுடன் பொகவந்தலாவையின் பல பகுதிகளும் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .