Kogilavani / 2016 ஜூலை 01 , மு.ப. 04:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆ.ரமேஸ்
'கூட்டு ஒப்பந்த பேச்சுவார்த்தை இழுபறி நிலையிலுள்ளதால் இடைக்காலக் கொடுப்பனவாக வழங்கப்படுவதாக கூறப்பட்ட 2,500 ரூபாய் தொடர்பில் உரிய தொழிற்சங்கங்கள், தொழிலாளர்களுக்கு முறையான விளக்கத்தை வழங்க வேண்டும்' என இலங்கை தொழிலாளர் சங்கத்தின் சிரேஷ்ட உப-தலைவர் கு.இராஜேந்திரன் கோரியுள்ளார்.
இது தொடர்பில் மேலும் கூறியுள்ள அவர்,
'தமிழ் முற்போக்கு கூட்டணி வழங்கிய அழுத்தம் காரணமாக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 2,500 ரூபாய் கொடுப்பனவை வழங்குவதாக அரசாங்கம் ஒப்புக்கொண்டுள்ளது. எனினும், இத்தொகையை பெற்றுக்கொள்ள வேண்டாமென சில தொழிற்சங்கங்கள் தம்மை வற்புறுத்தி வருவதாக தொழிலாளர்கள் சிலர் எம்மிடம் முறையிட்டுள்ளனர். 2,500 ரூபாயை பெற்றுக்கொள்வதில் தொழிலாளர்கள் குழப்ப நிலையை எதிர்கொண்டுள்ளனர்' என்றார்.
'பெருந்தோட்டப் பகுதிகளில் தொழிற்சங்கங்களுக்கு புதிய அங்கத்தவர்களை இணைத்துக் கொள்ளும் பணிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், தொழிலாளர்களை திசை திருப்பும் செயற்பாடுகளில் மாற்றுத் தொழிற்சங்கங்கள் ஈடுப்பட்டு வருகின்றன.
பெருந்தோட்;ட தொழிலாளர்களின் மீது அக்கறை கொண்டு, ஏனைய தொழிற்சங்கங்கள் செய்யும் சேவைகளை திசை திருப்பும் செயல்களுக்கு முற்றுப்புள்ளியிட வேண்டும். அதேவேளை, அரசாங்கம் மற்றும் தொழிற்சங்கங்கள் ஊடாக பெற்றுக் கொடுக்கப்படும் சேவைகள் தொடர்பில் மக்கள் விளக்கமும் விழிப்புணர்வும் அடைய வேண்டும்' எனவும் அவர் கோரினார்.
11 Apr 2026
11 Apr 2026
11 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 Apr 2026
11 Apr 2026
11 Apr 2026