2026 ஏப்ரல் 13, திங்கட்கிழமை

1,000 ரூபாய் சம்பளம் வலியுறுத்தப்படாவிட்டால் கறுப்பு மே தினம் அனுஷ்டிக்கப்படும்

Sudharshini   / 2016 ஏப்ரல் 28 , மு.ப. 10:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.கணேசன், ஆ.ரமேஷ்

'தோட்டத் தொழிலாளர்களை ஏமாற்றாது 1,000 ரூபாய் சம்பளத்தை பெற்றுக்கொடுப்பதை வலியுறுத்தும் வகையில்  தொழிற்சங்கங்களின் மே தின கூட்டங்கள்  நடைபெற வேண்டும். அவ்வாறு அமையாவிட்டால் கறுப்பு மே தினத்தை  கொண்டாடுவோம்;' என பத்தனை, திம்புள்ள சந்தியில் நேற்று (19) இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட தொழிலாளர்கள் தெரிவித்தனர்.

'இம்முறை கொண்டாடப்படும் மே தின கூட்டத்திலாவது, மலையக தொழிற்சங்கவாதிகள் மற்றும் அரசியல்வாதிகள் உண்மையான வாக்குறுதிகளை மக்களுக்கு வழங்க வேண்டும்.

இதைவிடுத்து காலம் காலமாக சொல்லி வந்த பொய்யான கூற்றுக்கள் இம்முறையும் மேடை ஏறும் பட்சத்தில், கறுப்புகொடிகளை ஏந்துவோம்' என அவர்கள் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .