Kogilavani / 2016 ஜூன் 29 , மு.ப. 04:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
மு.இராமச்சந்திரன்
மலையக மக்கள், 200 வருடங்களைத் தாண்டியும், அதே லயன் அறைகளிலும் தற்காலிக குடில்களிலுமே இன்றும் வாழ்ந்து வருகின்றனர். லயன்முறை வாழ்க்கையை இல்லாதொழித்தால் மாத்திரமே, மலையக மக்கள், தங்கள் சுபீட்சத்தை அடைந்து கொள்ள முடியுமென மத்திய மாகாண சபை உறுப்பினரும் தொழிலாளர் தேசிய சங்கத்தின் தேசிய அமைப்பாளருமான சோ.ஸ்ரீதரன் தெரிவித்தார்.
டிக்கோயா, டிலரி தோட்டத்துக்கு விஜயம் செய்து, அங்கு தற்காலிக குடில்களில் வாழ்ந்த மக்களை பார்வையிட்;டதன் பின்னர் கருத்து தெரிவிக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், 'மலையக மக்கள், இந்நாட்டின் பொருளாதார முதுகெலும்புகளாக இருந்தாலும் கூட, காலனித்துவ ஆட்சிக் காலத்தில் இவர்களுக்கென அமைத்துக்கொடுக்கப்பட்ட அந்த லயன் அறைகளிலேயே இன்றும் அவர்கள் வாழ்ந்து வருகின்றனர். அந்த லயன் அறைகளுக்கு, 100 - 150 வருடங்களுக்கு முன் போடப்பட்ட கூரைத்தகடுகளே இன்றும் காணப்படுகின்றன' என்றார்.
'இதனால், மழைக்காலங்களில் தோட்டத் தொழிலாளர்கள் பாரிய இன்னல்களுக்கு முகங்;கொடுக்கின்றனர். அதேவேளை, இன்று தோட்டப்புறங்களில் அதிகரித்து வரும் மக்கள் தொகைக்கேற்ப, அவர்களுக்கு வீட்டு வசதிகள் இல்லை. பல குடும்பங்கள் ஒரே லயன் அறைகளுக்குள் வாழும் அதேவேளை, லயன்களுக்கு அருகிலான மரக்கறி தோட்டங்களில் தற்காலிக குடில்களை அமைத்தே வாழ்க்கை நடத்துகின்றனர். தோட்டங்களில் தொழிலாளர்களாக வாழ்கின்ற இவர்களில் பெரும்பாலானோருக்கு, தோட்டங்களில் வீடு கட்டுவதற்கு இடங்களும் வழங்கப்படுவதில்லை. இவர்களின் உழைப்பு மாத்திரமே தேவையாக இருக்கின்றதே தவிர, இவர்களுக்கான தேவைகளை நிறைவேற்றிக் கொடுக்க யாரும் முன்வரவில்லை.
குடிசைகளில் வாழும் மக்களுக்கும், தனி வீடுகள் நிச்சயம் வெகுசீக்கிரத்தில் அமைத்துக் கொடுக்கப்படும். அதேவேளை, எல்லா மலையக மக்களுக்கும் இந்தத் தனி வீடுகள் அமைத்துக் கொடுக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அரசியல்வாதிகள் வழங்குகின்ற பொய்யான வாக்குறுதிகளைத் தாண்டி, அமைச்சர் திகாம்பரம் இன்று, பாரிய முன்னோடியாக திகழ்ந்து மலையக மக்களுக்கென சொந்தமாக தனி வீட்டுத் திட்டத்தினை ஏற்படுத்தி பல நூற்றுக்கணக்கான வீடுகளில் மக்கள் வாழ்வதற்கும் வழி செய்துள்ளார்' எனவும் அவர் குறிப்பிட்டார்.
'புதைக்கப்பட்டுப் போன மலையக மக்களின் வாழ்வை மேம்படுத்தும் பத்தாண்டுத் திட்டத்தையும் புதுமைப்படுத்தி, ஐந்தாண்டுத் திட்டமாக தற்போது நடைமுறைப்படுத்தி வருகின்றார். இந்த ஐந்தாண்டுத் திட்டத்தின் ஊடாக, மலையக மக்களின் உட்கட்டமைப்பு மற்றும் ஏனைய வசதிகளும் பூரணப்படுத்தப்பட்டு, நாட்டின் பொருளாதாரத்தில் முதுகெழும்பான எம்மக்கள் சுபீட்சத்துடன் வாழ வழி செய்து வருகின்றார்' என அவர் மேலும் தெரிவித்தார்.
9 hours ago
11 Apr 2026
11 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
11 Apr 2026
11 Apr 2026