2026 ஏப்ரல் 19, ஞாயிற்றுக்கிழமை

216 வீடுகளுக்கு அடிக்கல் நாட்டல்

Kogilavani   / 2017 ஏப்ரல் 26 , மு.ப. 09:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர்   பழனி திகாம்பரத்தினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற தனிவீட்டு திட்டத்தின் தொடர்ச்சியாக, 216 தனி வீடுகள் பதுளை மாவட்டத்தில் மண்சரிவினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக நிர்மாணிக்கப்படவுள்ளன.  

பதுளை மாவட்டத்தில் அம்பிட்டிகந்த தோட்டத்தில் 157 வீடுகளும்   பூணாகலை தோட்டத்தில் 59 வீடுகளுக்குமான அடிக்கல் நாட்டு நிகழ்வு, அமைச்சர் பழனி திகாம்பரம் தலைமையில் இன்று இடம்பெறவுள்ளது.

இவ் தனி வீடுகள் 7 பேர்ச்சஸ் காணியில் 550 சதுர அடியில் 10 இலட்சம் செலவில் நிர்மாணிக்கப்பட்டு, உறுதிப்பத்திரத்துடன் பயனாளிகளுக்கு கையளிக்கப்படவுள்ளன.

அடிக்கல் நாட்டு நிகழ்வில் பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரகளான ஏ.அரவிந்குமார், வடிவேல் சுரேஷ் தொழிலாளர் தேசிய சங்கம் மற்றும் தொழிலாளர் தேசிய முன்னணியின் அமைப்பாளர் ராஜமாணிக்கம் உட்பட அதிதிகள் பலர் கலந்துகொள்ளவுள்ளனர். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .