Kogilavani / 2015 ஒக்டோபர் 18 , மு.ப. 10:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
-கு.புஸ்பராஜ்
வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட நிலையில் கிளன்லைன் தமிழ் வித்தியாலயத்தில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களுக்கு, பூட்டப்பட்ட நிலையில் காணப்படும் தோட்ட வெளிக்கள உத்தியோகத்தர்களின் வீடுகள், திங்கட்கிழமை தற்காலிகமாக கையளிக்கப்படவுள்ளன.
அக்கரப்பத்தனை, கல்மதுரை தோட்டத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட ஏழு குடும்பங்களை சேர்ந்த 32 பேர், தொடர்ச்சியாக கிளன்லைன் தமிழ் வித்தியாலய மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இவர்களுக்கான நிவாரண உதவிகளை தோட்ட நிர்வாகம் மற்றும் நுவரெலியா பிரதேச செயலகம், அரச சார்பற்ற நிறுவனங்கள், தோட்ட பொதுமக்கள் வழங்கி வருகின்றனர்.
நிவாரண உதவிகள் வழங்கப்பட்டாலும் தொடர்ச்சியாக இங்கு தங்கியிருக்க முடியாதென பாதிக்கப்பட்ட மக்கள் அதிகாரிகளுக்கு தெரிவித்துள்னர்.
இதேவேளை, பூட்டப்பட்ட நிலையில் காணப்படுகின்றன வெளிக்கள உத்தியோகஸ்தர்களின் ஐந்துக்கும் மேற்பட்ட வீடுகளையாவது தமக்கு கையளிப்பதற்கு முன்வரவேண்டுமென பாதிக்கபட்ட மக்கள், மலையக மக்கள் முன்னணியின் அக்கரப்பத்தனை அமைப்பாளர் சாந்தகுமாரிடம் வேண்டுகோள் விடுத்தனர்.
இவ்விடயம் மத்திய மாகாண சபை உறுப்பினர் ராஜாராமின் கவணத்துக்கு கொண்டுவரப்பட்டதை தொடர்ந்து அவர், தோட்ட அதிகாரியுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு தற்காலிகமாக வீடுகளை வழங்குவதற்கு தோட்ட அதிகாரி இணக்கம் தெரிவித்ததை தொடர்ந்து வீடுகள் திங்கட்கிழமை கையளிக்கப்படவுள்ளதாக சாந்தகுமார் கூறினார்.
9 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
1 hours ago