Kogilavani / 2016 ஓகஸ்ட் 21 , மு.ப. 11:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.சுஜிதா
நுவரெலியா, லிந்துலை- வோல்ட்ரீம் தோட்ட வைத்தியசாலையில் நிலவும் குறைபாடுகளை நிவர்த்திப்பது தொடர்பில் தோட்ட முகாமையாளருடன் கலந்துரையாடவுள்ளதாகவும் இவ்விடயத்தை மத்திய மாகாண சுகாதார பணிப்பாளரின் கவனத்துக்குக் கொண்டுச் செல்வதாகவும் மத்திய மாகாண சபை உறுப்பினர் ஏ.பி.சக்திவேல் குறிப்பிட்டார்.
மேற்படி வைத்தியசாலையில் நிலவும் பௌதீக வளப்பற்றாக்குறை மற்றும் மொழிப் பிரச்சினை தொடர்பில் கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இது தொடர்பில் மேலும் கூறிய அவர், தோட்ட வைத்தியசாலைகளில் பணியாற்ற கல்விக் கற்ற மலையக இளைஞர், யுவதிகள் முன்வருவதில்லை. 3 வருட பயிற்சியின் பின்னரே சேவையில் நிரந்தரமாக்கப்படுவர் என்பதனை காரணமாக வைத்து மலையக இளைஞர், யுவதிகள் இவ்வாய்ப்பை தட்டிக்கழிக்கின்றனர். இதனை பெரும்பான்மையினர் வாய்பாக்கிக்கொள்கின்றனர். இதுவே தோட்ட வைத்தியசாலைகளில் மொழிப் பிரச்சினை ஏற்படக் காரணமாக அமைந்துள்ளது.
எனினும், இவ்விடயங்களை மத்திய மாகாண சுகாதார பணிப்பாளரின் கவனத்துக்குக் கொண்டுச்செல்வது இப்பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கின்றேன்' என்றார்.
வட்டவளை பெருந்தோட்ட கம்பனிக்குட்பட்ட வோல்ட்ரீம் தோட்ட வைத்தியசாலை பௌதிக வளப்பற்றாக்குறையுடனே இயங்கி வருவதாக பிரதேச மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். வோல்ட்ரீம் தோட்டமானது 6 டிவிஷன்களைக் கொண்டது. மெராயா, கௌலினா, வோல்ட்ரீம், கொணன், லென்தோமஸ், செந்தில் பத்தனை ஆகிய 6 டிவிசன்களை சேர்ந்தோர் இவ்வைத்தியசாலையை பயன்படுத்தி வருகின்றனர்.
இவ்வைத்தியசாலையில் குடிநீர்வசதி, மலசலகூட வசதியின்மையால் நோயாளர்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர். குறிப்பாக இவ்வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக வரும் கர்ப்பிணிகள் அமர்வதற்கு இருக்கை வசதிகள்கூட இல்லையென சுட்டிக்காட்டியுள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார்.
26 minute ago
29 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 minute ago
29 minute ago
1 hours ago
1 hours ago