Kogilavani / 2016 ஓகஸ்ட் 21 , மு.ப. 10:57 - 0 - {{hitsCtrl.values.hits}}

எம்.செல்வராஜா
வெலிமடை - கெப்பட்டிபொல பிரதேசத்தில், மோட்டார் சைக்கிளொன்று பிரதான வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் இராணுவ சாஜனான பாலித்த குமார (வயது 39) பலியாகியுள்ளார்.
மோட்டார் சைக்கிள் சுமார் 4 அடி ஆழமான கால்வாய்க்குள் விழுந்து சிறிது தூரம் பயணித்தே விபத்துக்குள்ளாகியுள்ளது. அந்த மோட்டார் சைக்கிளை செலுத்தி சென்றவரின், தலை அடிப்பட்டமையாலேயே அவர் உயிரிழந்துள்ளார் என்று அறியமுடிகின்றது.
நுவரெலியா இராணுவ முகாமில் கடமையாற்றும் ஒருவர், பணியை முடித்துவிட்டு வெலிமடை பிரதேசத்தில் உள்ள தனது வீட்டுக்கு மோட்டர் சைக்கிளில் பயணித்துகொண்டிருந்த போதே இவ்வனர்த்தம் ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக வெலிமடை பொலிஸார் தெரிவித்தனர்.



6 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
7 hours ago