Sudharshini / 2016 ஜூன் 29 , மு.ப. 10:40 - 0 - {{hitsCtrl.values.hits}}

மு.இராமசந்திரன்
'மனித உயிரை அழிக்கும் மது எனும் அரக்கனை வேரோடு அழிப்போம்' எனும் தொனிப்பொருளில் ஹட்டன் கல்வி வலயத்துக்குட்பட்ட கார்பெக்ஸ் தமிழ் மகா வித்தியாலய மாணவர்களின் ஏற்பாட்டில் விழிப்புணர்வு பேரணியொன்று இன்று புதன்கிழமை (29) நடைபெற்றது.
இப்பேரணி, காசல்ரீ சந்தியூடாக நோட்டன் பிரதான பாதையில் கிளவட்டன் தமிழ் வித்தியாலயம் வரை சென்று, மீண்டும் ஹட்டன் பிரதான பாதையில் காசல்ரீ கடைவீதியை சென்றடைந்தது.
இந்த விழிப்புணர்வு பேரணியில் பெற்றோர் மற்றும் நோட்டன் பிரிட்ஜ் பொலிஸாரும் கலந்துகொண்டனர்.
காசல்ரீ பிரதான சந்தியில் மாணவர்களின் விழிப்புணர்வு வீதி நாடகமும் இடம்பெற்றதுடன், மது மற்றும் போதைவஸ்த்து பாவனையால் ஏற்படும் சீரழிவுகள் தொடர்பிலான விழிப்பூட்டல் துண்டுப் பிரசுரங்களும் விநியோகிக்கப்பட்டன.




11 Apr 2026
11 Apr 2026
11 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 Apr 2026
11 Apr 2026
11 Apr 2026