2026 ஏப்ரல் 04, சனிக்கிழமை

14 வயது சிறுமி கர்ப்பம்: தாயும் இளைஞனும் கைது

Sudharshini   / 2016 மே 31 , மு.ப. 04:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.செல்வராஜா          

14 வயது சிறுமியுடன் குடும்பம் நடத்திய குற்றச்சாட்டில், 18 வயது இளைஞனொருவரையும் அவருக்கு உடந்தையாக இருந்தாரெனக் கூறப்படும் சிறுமியின்  தாயையும் வெல்லவாய பொலிஸார், ஞாயிற்றுக்கிழமை (29)  கைதுசெய்துள்ளனர்.

சிறுமி தற்போது கரப்பம் தரித்துள்ளதாக வைத்திய பரிசோதனையில் தெரியவந்துள்ளது.

ஹப்புத்தளையைச் சேர்ந்த யுவதியும் வெள்ளவாயவைச் சேர்ந்த இளைஞனும், கடந்த ஒன்பது மாதங்களாக குடும்பம் நடத்தி வந்துள்ளனர். இதற்கு உடந்தையாக யுவதியின் தாய் இருந்துள்ளார்.

இந்நிலையில், உடல்நலம் பாதிக்கப்பட்ட சிறுமி, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டப்போதே, அவர் ஏழு மாத கர்ப்பிணி என்பது தெரியவந்துள்ளது. சிறுமியின் வயதைக் கேட்ட வைத்தியர்கள், அது தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர். சிறுமியிடம் மேற்கொண்ட விசாரணையைத் தொடர்ந்து, மேற்படி இருவரையும் பொலிஸார் கைதுசெய்துள்ளனர். இவர்களை வெல்லவாய நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் கூறினர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .