2026 ஏப்ரல் 15, புதன்கிழமை

9 வயது சிறுவனை வன்புணர்வுக்கு உட்படுத்திய குடும்பஸ்தர் கைது| மகனும் சிக்கினார்

Kogilavani   / 2016 ஏப்ரல் 22 , மு.ப. 05:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆ.ரமேஸ்

பொதுமக்கள் செய்த ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து, வெலிஓயா கீழ்பிரிவு தோட்டத்தில் 9 வயது சிறுவனை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியதாக கூறப்படும் 53 வயது குடும்பஸ்தரை பொலிஸார் கைதுசெய்துள்ளதுடன், கத்திமுனையில் பொதுமக்களை மிரட்டியதாகக் கூறப்படும் மேற்படி நபரின் மகனையும் பொலிஸார் நேற்று (22) கைதுசெய்துள்ளனர்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, 'கடந்த மாதம் 21ஆம் திகதி மேற்படி  சிறுவனை வன்புணர்வுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில், இரண்டுமுறை திருமணம்  செய்த நபரை சந்தேகத்தின் பேரில்  பொலிஸார் கைதுசெய்திருந்தனர்.

இவருக்கு எதிராக, நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு மேற்படி நபர் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.  இச்சம்பவம் தொடர்பிலான வழக்கு  மீண்டும் செவ்வாய்க்கிழமை(19) ஹட்டன் நீதவான் நீதிமன்ற நீதவான் டபிள்யூ.எம்.லியனகே முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்டபோது   அந்;நபர் நீதிமன்றில்  கேட்டுக் கொண்டதற்கமைவாக காசுப் பிணையில் விடுவிக்கப்பட்டார். இதனை கேள்வியுற்ற பிரதேச மக்கள், குறித்த நபரின் பிணையை இரத்து செய்து மீண்டும் அவரைச் சிறையில் வைக்குமாறு கோரி புதன்(20) மற்றும் வியாழக்கிழமை(21) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களை, மேற்படி  நபரின் மகன் கத்திமுனையில் அச்சுறுத்தியுள்ளார். சம்பவ இடத்துக்கு வந்த பொலிஸார் இருவரையம் கைதுசெய்ததுடன் கத்தியையும் கைப்பற்றினர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .