Kogilavani / 2016 மே 26 , மு.ப. 04:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
மொஹொமட் ஆஸிக்
' நாட்டில் கடன் சுமை அதிகம் எனக் கூறி, மக்களுக்கு அதிக சுமைகளை ஏற்படுத்ததாமல் அரசாங்கம் மென்மையான போக்கை கடைப்பிடிக்க வேண்டும். நாட்டைக் கொண்டு நடத்த வரிகள் தேவை. ஆனால், வரி அறிவிடுவதானது நாட்டு மக்களுக்கு பாரிய சுமையாக மாறிவிடக்கூடாது' என என அஸ்கிரிய பீடத்தின் அனுநாயக்கத் தேரர்; ஆனமடுவே தம்மாலோக்க தேரர் தெரிவித்தார்.
கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சர் காமினி திசாநாயக்கவின் புதல்வருமான மயந்த திசாநாயக்க, அனுநாயக்கத் தேரரை சந்தித்து நல்லாசிபெற்றப் போதே அவர் இதனை கூறினார்.
இதன்போது, மேலும் கூறிய அவர்,
'மறைந்த முன்னாள் அமைச்சர் காமினி திசாநாயக்க, நாட்டுக்காக செய்த சேவைகளை அவர்களது புதல்வர்கள் திறம்பட முன்னெடுக்க வேண்டும். அமரர் காமினி திசாநாயக்க, நாட்டுக்காகச் செய்த சேவைகளை ஒருபோதும் மறக்க முடியாது' என்றும் அவர் சுட்டிக்கட்டினார். 'மயந்த திசாநாயக்கா மற்றும் அமைச்சர்; நவின் திசாநாயக்க ஆகிய இருவரும் தந்தையின் சேவையை தொடர வேண்டும்' என்றார்.
5 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
9 hours ago